sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

இளஸ் மனஸ்! (245)

/

இளஸ் மனஸ்! (245)

இளஸ் மனஸ்! (245)

இளஸ் மனஸ்! (245)


PUBLISHED ON : ஏப் 13, 2024

Google News

PUBLISHED ON : ஏப் 13, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்பு பிளாரன்ஸ்...

என் மகளுக்கு வயது, 10 ஆகிறது; ஆள் அழகாய் இருப்பாள். நன்றாக படிப்பாள். ஆனால், முழங்கால்கள், கணுக்கால்கள், முழங்கைகள், பின்னங்கழுத்து, அக்குள்களில் கறுப்பு திட்டு படர்ந்துள்ளது. அதைக் காட்டி, என் மகள் அழாத நாளில்லை.

அந்த கறுமையான திட்டு பிரதேசங்களை அகற்ற வழி சொல்லுங்க அம்மா.

வேதனையில் வாடும்,

சரஸ்வதி சுந்தர்.



அன்புள்ள அம்மா...

உங்கள் மகளுக்கு, முழங்கால், முழங்கை, பின்னங்கழுத்துகளில், கறுமை பூக்க கீழ்க்கண்ட காரணங்கள் ஏதுவாய் இருக்கும்.

தவளும் போதோ, விளையாடும் போதோ, முழங்கையை தரையில் ஊன்றி, முகவாயை தாங்கி பிடிக்கும் போதோ உராய்வுகள் ஏற்பட்டு, அந்த பகுதிகள் கறுத்திருக்கலாம். மெலனின் நிறமி, தேவைக்கு அதிகமாய் சுரந்து, கறுமை ஏற்படலாம். இதை, ஆங்கிலத்தில், 'ைஹபர் பிக்மென்டேஷன்' என்பர்.

மற்ற வியாதிகளுக்கு உட்கொண்ட மருந்துகளின் பக்கவிளைவாக இருக்கலாம். உடலில், சுயசுத்தம் பேணாமை காரணமாக, தோல் நோய்கள் வந்திருக்கலாம்.

ஹார்மோன் சுரப்பு ஏற்ற இறக்கத்தாலும் இது நிகழலாம். சில உணவு பொருட்களால், ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கலாம்.

கீழ்கண்ட வழிகளில், முழங்கால், முழங்கை கறுமைகளை போக்கலாம்...

அலோபதியில், 'வின்ஸ்பெர்ரி' என்ற கிரீம் தடவலாம். அல்லது ஆயுர்வேத மருத்துவத்தில், 'விலா' என்ற கிரீம் தடவலாம். மருத்துவர் ஆலோசனையுடன் வைட்டமின் - சி மாத்திரை உட்கொள்ளலாம்.

எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி, பேக்கிங்சோடா 1 தேக்கரண்டி கலந்து, கறுமை படிந்த இடங்களில் தடவலாம்.

மூன்று நிமிடத்திற்குப் பின், குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். மோர் அல்லது பால் பருத்தி துணியில் நனைத்து, கறுமை இடத்தில் தடவி, 10 நிமிடத்துக்கு பின் கழுவலாம்.

இரவு துாங்க செல்ல முன், கற்றாழை சாறை கறுமை இடங்களில் தடவி, காலையில் கழுவலாம்.

ஆப்பிள் சிடார் வினிகரை தண்ணீருடன் கலந்து தடவி அலசலாம்.

அழகு நிலையங்களில், 'கிளைகாலிக் ஆசிட்' வைத்து, ரசாயன உரிப்பு செய்வர். நுண்ணிய தோல் அழற்சி மூலமும், கறுமையை அகற்றுவர். லேசர் மறு உருவாக்கமும் செய்வர். குறை வெப்ப மருத்துவம் வழியாகவும் கறுமை அகற்றலாம்.

கீரை, உலர் பழங்கள், பப்பாளி, கிவி பழம், தக்காளி, பால், முட்டை, வெண்ணெய், காரட், தயிர், ஓட்ஸ், இஞ்சி, தர்பூசணி, சியா விதைகள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உங்கள் மகளை குழந்தைகள் நல மற்றும் தோல் நோய் சிறப்பு மருத்துவரிடம் அழைத்து சென்று, தகுந்த மருத்துவ ஆலோசனை பெறவும். சோப்புக்கு பதில், கடலை மாவு தேய்த்து குளிக்கலாம். கறுமையும், தோல் நோயும் அண்டவே அண்டாது!

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.






      Dinamalar
      Follow us