
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 55; மில் தொழிலாளியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழை பல ஆண்டு காலமாக படித்து வருகிறேன். இதில் இடம் பெறும், 'ஸ்கூல் கேம்பஸ்!' கடிதங்கள் பள்ளியில் படித்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவில் கொண்டு வருகிறது. வாழ்வை குதுாகலப்படுத்துகிறது
ஆரோக்கிய சமையலை அறிமுகம் செய்யும், 'மம்மீஸ் ெஹல்த்தி கிச்சன்' தரும் உணவு செய்முறைகளை படிக்கும் போதே, நாவில் எச்சில் ஊறுகிறது.
சிறுவர், சிறுமியர் அறிவை துாண்டி விடுகின்றன, கட்டுரை மற்றும் புதிர். எல்லா வயதினரும் படித்து மகிழ ஏற்ற சிறுவர்மலர் இதழ் மேலும் சிறப்புற வாழ்த்துகள்!
- இ.நாகராஜன், விருதுநகர்.
தொடர்புக்கு: 88703 71809