
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
முருங்கை கீரை - 50 கிராம்
ஏலக்காய் பொடி, சுக்கு பொடி, வெந்தயம், பாசிப்பருப்பு - சிறிதளவு
மிளகு பொடி, சீரக பொடி, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசி, பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து, அரை வேக்காடாக்கவும். அதனுடன், முருங்கை கீரை, வெந்தயம், சீரக பொடி, ஏலக்காய் பொடி, சுக்கு பொடி, மிளகு பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
சுவை மிக்க, 'முருங்கைக்கீரை கஞ்சி!' தயார். சத்துகள் நிறைந்தது. அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.
- ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.
தொடர்புக்கு: 99940 16314