
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 6
உப்பு, கறிவேப்பிலை, கடுகு, பெருங்காய துாள் - சிறிதளவு
மிளகு, புளி, சீரகம், தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
கடாய் சூடானதும், கொள்ளு, காய்ந்த மிளகாய், மிளகு போட்டு நன்றாக வறுக்கவும். ஆறியதும், புளி, சீரகம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைக்கவும். எண்ணெயில், கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த கலவையை கொட்டி கொதிக்க விடவும்.
சத்து மிக்க, 'கொள்ளு மிளகு குழம்பு' தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிட, சுவை தரும். அனைத்து வயதினரும் விரும்புவர்.
- ஜி.சுந்தரம்பாள், சென்னை.
தொடர்புக்கு: 97911 75067