
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு, துவரம் பருப்பு, கடலை பருப்பு - தலா 100 கிராம்
அரிசி - 200 கிராம்
சிறிய தேங்காய் - 1
பூண்டு பல் - 4
காய்ந்த மிளகாய்- 2
சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு
எண்ணெய், கடுகு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பயறு, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, அரிசியை, தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும், காய்ந்த மிளகாய், பூண்டு, துண்டாக்கிய தேங்காய், உப்பு சேர்த்து அரைக்கவும்.
எண்ணெய் சூடானதும், கடுகு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த மாவுடன் கலந்து அடையாக வார்க்கவும். சுவை மிக்க, 'பாசிப்பயறு அடை' தயார்! அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- அனுஷா, சென்னை.