
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 36; அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிகிறேன். பணி நெருக்கடியின் போதும், சிறுவர்மலர் இதழ் படிப்பதை தவறவிட்டதில்லை.
இதில் வரும், ஸ்கூல் கேம்பஸ், மம்மீஸ் ெஹல்த்தி கிச்சன், இளஸ் மனஸ், சிறுகதை என அனைத்து பகுதிகளும் மனதை கவரும் வகையில் உள்ளன. வாசிப்பது, இனிமை தரும் அனுபவமாக உள்ளது.
என் மகனுக்கு, ஏழு வயதாகிறது. அரசு பள்ளியில், 2ம் வகுப்பு படிக்கிறான். சிறுவர்மலர் இதழில் வரும் கதைகளை எழுத்து கூட்டி படிக்க பயிற்சி செய்து வந்தான். இப்போது சிறப்பாக வாசிக்க பழகியிருக்கிறான்.
இரவில் படுக்கைக்கு செல்லும் முன், இரண்டு வயது மகனுக்கு, சிறுவர்மலர் இதழ் கதைகளை சொல்வேன். அதை, கவனமாக கேட்பான். இது, மிகவும் மகிழ்ச்சி தருகிறது; உள்ளம் கவர்ந்த சிறுவர்மலர் இதழுக்கு நன்றியும், வாழ்த்துகளும்!
- இ.சங்கீதா, மதுரை.