
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
மாதுளை விதை - 1 கப்பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் -
1உளுந்தம் பருப்பு, துருவிய தேங்காய் - சிறிதளவுகடுகு, கறிவேப்பிலை,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு போட்டு வதக்கவும். பின், மாதுளை விதை, துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும்.
சுவை மிக்க, 'மாதுளை பொரியல்' தயார். பக்க உணவாக பயன்படுத்தலாம். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- எம்.முருகலட்சுமி, திண்டுக்கல்.
தொடர்புக்கு: 95665 59435