PUBLISHED ON : மே 25, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு, தேங்காய் பால் - தலா 2 கப்
வெல்லம் - 2 கப்
முந்திரி - 15
கடலைப் பருப்பு, ஏலக்காய் துாள், நெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப் பருப்பு, கடலைப் பருப்பை சுத்தம் செய்து, தண்ணீர் கலந்து வேக வைக்கவும். அதில், வெல்ல பாகு, தேங்காய் பால் கலந்து கொதிக்க விடவும். பின், நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் துாள் சேர்த்து இறக்கவும்.
சுவை மிக்க, 'தேங்காய் பால் பருப்பு பாயசம்' தயார்! அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.