
வலசு காட்டுக்குள் விலங்குகளும், பறவைகளும் இணக்கமாக வாழ்ந்து வந்தன.
அன்று காலை மரக்கிளைகளை உடைத்து, இளம் தளிர்களை தின்றது யானை. அடுத்து இருந்த கிளையை ஒடிக்க தும்பிக்கையை உயர்த்தியது.
அது கண்டு பதறியபடி, 'அண்ணே... நேற்று தான், எனக்கு இரண்டு குஞ்சுகள் பிறந்திருக்கின்றன. கிளையை ஒடித்தால் கூடு அழிந்து விடும்; குஞ்சுகளுக்கு பருவம் வந்து பறந்து போகும் வரை பொறுமையாக இருந்து உதவு...' என்றது காகம்.
'அப்படியா தம்பி... வேறு இடம் செல்கிறேன்; நலமாக இருங்கள்...'
அமைதியாக புறப்பட்டது யானை.
குஞ்சுகளை அணைத்தபடி நன்றி தெரிவித்தது காகம்.
மாலையில் குஞ்சுகளுக்கு இரை ஊட்ட கூட்டை நோக்கி வந்தது காகம். வழியில், பள்ளம் வெட்டிய சிலர், 'வெட்டியது போதும். யானை வருவதற்குள் பள்ளத்தில் இலை தழைகளை பரப்புங்கள். வேலையை விரைந்து முடியுங்கள்...' என்ற பேச்சு கேட்டது.
யானையை பிடிக்க அவர்கள் வலை விரித்திருந்தனர். இது கண்டு கவலை அடைந்த காகம், 'ஐயோ... பள்ளம் தோண்டுகின்றனர். வேகமாக சென்று இது பற்றி யானை அண்ணனிடம் கூற வேண்டும்' என்று எண்ணியபடி பறந்தது.
குழந்தைகளே... ஒருவருக்கு நன்மை செய்தால் அது, உதவும் மனப்பான்மையை மேலும் வளர்க்கும்!
குறள் பித்தன்