sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

அதிமேதாவி அங்குராசு!

/

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜூன் 22, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 22, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உப்பில்லா பண்டம்!

சமையலில் பயன்படும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று உப்பு. இதன் பயன் பற்றி நீண்ட வரலாறு உண்டு. இந்திய விடுதலைப் போராட்டத்தில் உப்பு வரியை ரத்து செய்ய வேண்டி, யாத்திரை மேற்கொண்டார் காந்திஜி. நாட்டின் பல பகுதிகளில் இதை வலியுறுத்தி சத்தியாகிரகம் நடந்தது.

உலகில், பல வகை உப்புகள் இருக்கின்றன. அவற்றை தெரிந்து கொள்வோம்...

டேபிள் சால்ட்: மளிகை கடையில் விற்கப்படுகிறது. சமையலுக்கு பயன்படும் துாள் உப்பு தான் இது. பதப்படுத்தி அயோடின் மற்றும் ஆன்டிகேக்கிங் சேர்த்து உருவாக்கப்படுகிறது.

கோஷர் உப்பு: ஒரு வகையில் கரடுமுரடானது. குறைவான அளவில் சுத்திகரிக்கப்பட்டது. துாய சோடியம் குளோரைடு; அயனியாக்கம் செய்யப்படாதது. இறைச்சியை சுவையூட்ட அதிகம் பயன்படுகிறது.

ப்ளூர் டி செல்: இதற்கு கடலின் மலர் என்று பொருள். உலகின் மிக விலையுர்ந்த பொருட்களில் ஒன்று. நீரை உலர்த்தி தயாரிக்கப்படுகிறது. முதலில், ஐரோப்பிய நாடான பிரிட்டான் கடற்கரையில் தயாரிக்கப்பட்டது.

கடல் உப்பு: கடல் நீரை ஆவியாக்கி சேகரிக்கப்படுகிறது. இது, டேபிள் உப்பை விட, குறைவாகவே பதப்படுத்தப்பட்டது. ஒழுங்கற்ற செதில்கள் போல் காணப்படும். கிரேவி, ரசம், குழம்பு போன்ற உணவுகளில் சேர்க்கப்படுகிறது.

செல்டிக் கடல் உப்பு: இது, 'செல்கிரிஸ்' அதாவது, சாம்பல் உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு வகை கடல் உப்பு தான் இது. ஐரோப்பிய நாடான பிரான்ஸ் கடற்கரையில் உற்பத்தியாகிறது. களிமண் அடுக்கில் இருந்தும் பிரித்தெடுக்கப்படுகிறது. ரத்த அழுத்த குறைபாட்டுக்கு உரிய மருந்தில் பயன்படுகிறது.

ப்ளேக் சால்ட்: இது சமையலுக்கு பயன்படும் ஒரு வகை உப்பு. செதில் உப்பு படிகங்களை சிறிய துண்டுகளாக அரைத்து பிரிக்கப்படுகிறது. உணவில் மொறுமொறுப்பை சேர்ப்பது உள்ளிட்ட பலவிதமாக பயன்படுகிறது.

இளஞ்சிவப்பு உப்பு: இது, இமயமலை பகுதிகளில் பாறை படிகங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. சோடியம், இரும்பு, துத்தநாக கூறுகளால் ஆனது. இளஞ்சிவப்பு நிறத்தால் கவர்ச்சியாக இருக்கும். அதிக உவர்ப்பு சுவை உடையது.

கருப்பு உப்பு: இது, 'கலாநமக்' என்றும் குறிப்பிடப்படுகிறது. அண்டை நாடான பாகிஸ்தான் பகுதி இமயமலையில், எரிமலை பாறையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில், இரும்பு, மெக்னீஷியம், கால்ஷியம் நிறைந்துள்ளது. மிகவும் கடுமையான வாசனை மற்றும் சுவை உடையது.

சிவப்பு உப்பு: இது, ஹவாய் தீவில் சிவப்பு எரிமலை களிமண்ணில் இருந்து தயாரிக்கப்படுகிறது. 80க்கும் மேற்பட்ட தாதுக்களால் ஆனது; இரும்பு ஆக்சைடு நிறைந்தது. மென்மை சுவை உடையது. உணவுகளில் வண்ணம் சேர்க்க உதவுகிறது.

கருப்பு எரிமலை உப்பு: இது, அமெரிக்கா ஹவாய் தீவு மற்றும் மத்திய கிழக்கு நாடான சைப்ரசில் உற்பத்தி செய்யப்படுகிறது. எரிமலைக் குழம்பு கரியால் இருண்ட நிறம் கிடைக்கிறது. உடலை சுத்தப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.






      Dinamalar
      Follow us