PUBLISHED ON : ஜூன் 22, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை - 1 கட்டு
பாசிப்பருப்பு - 0.25 கப்
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
மிளகு - 10
எண்ணெய், சீரகம், சின்ன வெங்காயம் - தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை, உப்பு, தண்ணீர் - சிறிதளவு.
செய்முறை:
வாணலியில், எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, துண்டாக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன், நறுக்கிய மணத்தக்காளி கீரை, மிளகு, சீரகம், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ஆறியபின், அரைத்து வடிகட்டவும். அதில், வேகவைத்து மசித்த பாசிபருப்பு, உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவை மிக்க, 'மணத்தக்காளி கீரை சூப்' தயார். சத்துக்கள் நிறைந்தது. அனைத்து வயதினரும் விரும்பி பருகுவார்.
- எம்.வசந்தா, சென்னை.