PUBLISHED ON : ஜூன் 29, 2024

என் வயது, 50; தனியார் கல்லுாரியில், தட்டச்சராக பணிபுரிகிறேன். சிறுவர்மலர் இதழை, 20 ஆண்டு காலமாக படித்து வருகிறேன். இதில், சிறுவர், சிறுமியர் வரையும் ஓவியங்களைப் பார்த்து, என் மகளுக்கும் வரையும் ஆர்வம் வந்தது.
அழகாக வரைந்து, சிறுவர்மலர் இதழுக்கு அனுப்பினாள். அது, 'உங்கள் பக்கம்!' பகுதியில் இடம் பெற்று, பரிசு கிடைத்தது. பெரும் மகிழ்ச்சி அடைந்தாள்.
பின், வாரம் தவறாமல், சிறுவர்மலர் இதழை படித்து விடுகிறாள்! முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை இதன் வழியாக அறிந்து மகிழ்கிறாள்.
சிறுவர்மலர் இதழில், அங்குராசு கட்டுரை, சிறுகதை, ஸ்கூல் கேம்பஸ் என, எதையும் விடாமல் படித்து விடுவோம். நீதிக்கதைகளை சமயம் அறிந்து வாசிக்க கொடுக்கிறோம். குழந்தைகளை வழி நடத்த அவை ஏதுவாக உள்ளன. இதயம் கவர்ந்த, சிறுவர்மலர் இதழுக்கு மனம் நிறைந்த நன்றி!
- லதா கண்ணையன், கோவை.
தொடர்புக்கு: 91717 33685