தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குட்டிச் செய்திகள்

குட்டிச் செய்திகள்

குட்டிச் செய்திகள்


PUBLISHED ON : ஜூலை 23, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2010


Follow on Google
அ நிறம் | அளவு

*லண்டனை சேர்ந்த ஒரு விவசாயி மிட்வின் வில்லியம்ஸ் என்பவர் 725 கிலோ எடைக்கொண்ட பூசணிக்காயை பயிரிட்டார். இதை நல்ல விலைக்கு விற்று தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார்.

* லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து ஒருவர் 14 பாடும் பறவைகளை தன் பேன்ட்டில் மறைத்து வைத்து கடத்தினார். பறவைகளை ஆடையின் உட்பகுதியில் பைபோன்ற அமைப்பில் மறைத்திருந்தார். விமான நிலையத்தில் சுங்கவரி துறையினர் பரிசோதிக்கும் போது உடையில் பறவை கழிவும், சாக்சில் இறகுகளும் ஒட்டி இருந்தது. சந்தேகம் கொண்ட அதிகாரி பரிசோதித்தப்போது மாட்டிக் கொண்டார்.

* இதயம் நின்று போதல் - மாரடைப்பின் காரணமாக சுவாசமும், நாடித்துடிப்பும் இன்றி இதயத்தின் செயல்பாடு நின்றுபோவதையே, இதயம் நின்று போதல் என்று கூறுகின்றனர். அளவுக்கதிகமான ரத்த இழப்பு, மூச்சுத் திணறல், மின் அதிர்ச்சி, ஒவ்வாமையினால் உணர்விழத்தல் போன்றவற்றினாலும், மருந்து மாத்திரைகள் அதிக அளவு உட்கொள்ளுவதினாலும்கூட இதயம் செயல்படாமல் நின்றுபோகக்கூடும்.



அறிகுறிகள்:

1. நாடித்துடிப்பு நின்று     போதல்.

2. சுவாசம் நின்று போதல்.

முதலுதவி:

1. அவர் உணர்விழந்துவிட்டாரென்றால், முதலில் அவரது சுவாசத்தையும், நாடித்துடிப்பையும் பரிசோதியுங்கள்.

2. இரண்டும் நின்று போயிருந்தால், தொலைபேசியில் 102 எண்ணைத் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் வர ஏற்பாடு செய்யுங்கள்.



* யுரேகா... யுரேகா...!

இங்குள்ள குட்டி குட்டி கேள்விகளுக்கான பதில்களை கண்டுபிடிங்க ஸ்மார்ட்டீஸ்!

1. பாரத ரத்னா விருது பெற்ற ஒரே குடும்பத்தை  சேர்ந்த மூவர் யார்?

2. நீலகேசி என்னும் நூலுக்கு உரை எழுதியவர்  யார்?

3. அசோகரின் தந்தை பெயர் என்ன?

4. யமுனை நதி கங்கை நதியுடன் கலக்கும் இடம்  எது?

5. நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடை எந்த மன்னனைப் பற்றியது?

விடைகள் :

1.ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, 2.வாமன முனிவர்,  3.பிந்துசாரர்,  4.அலகாபாத், 5.பாண்டியன் நெடுஞ்செழியன்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us