தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தயங்காத மனம்!

தயங்காத மனம்!

தயங்காத மனம்!


PUBLISHED ON : ஆக 29, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, தே.பிரித்தோ உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 10ம் வகுப்பு படித்தபோது, தந்தை இறந்தார். வறுமையில் வாடியது குடும்பம். மேலும் ஓர் ஆண்டு படித்தால்தான், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத முடியும். மிகக் கவலையுடன் சிந்தித்தேன்.

வகுப்பு ஆசிரியர் முத்துக்கிருஷ்ணனை, அம்மாவுடன் சென்று சந்தித்தேன். சோக மிகுதியால், 'உணவுக்கே வழியில்லாத நிலையில், தொடர்ந்து படிக்க வைக்க முடியுமா என்று தெரியவில்லை... நீங்கதான் வழி காட்டணும்...' என, கண்ணீர் மல்கினார் அம்மா.

எதையும் யோசிக்காமல், 'என் வீட்டில் தங்கி படிக்கட்டும்; எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்...' என தேற்றி கைச்செலவுக்கு, 200 ரூபாய் கொடுத்து அனுப்பினார் ஆசிரியர்.

வாக்களித்தபடி, குடும்பத்தில் ஒருவனாக பாவித்து அன்பும், ஆதரவும் தந்தார். அவரது உதவியால் நன்கு படித்தேன். தட்டச்சு பயற்சியும் பெற்றேன். அரசு பணியில் சேர்ந்து உயர்ந்தேன்.

என் வயது, 70; எந்த சூழ்நிலையிலும் தயங்காமல் உதவுவதை வழக்கமாக்கியுள்ளேன். அதைத் துாண்டிய ஆசிரியரை நன்றியுடன் மனதில் கொண்டுள்ளேன்!

- வெங்கட்ராமன், சென்னை.

தொடர்புக்கு: 94447 93594

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us