தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மசாலா அவல்!

மசாலா அவல்!

மசாலா அவல்!


PUBLISHED ON : ஆக 09, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்

எலுமிச்சைபழம் - 1

கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, தனியாபொடி கலவை - 2 தேக்கரண்டி.

சமையல் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, வறுத்த மிளகாய் பொடி, மசாலா துாள், பெருங்காயத் துாள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அவலை சுத்தம் செய்து, ஐந்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, வடித்து வைத்துக்கொள்ளவும். கடலை பருப்பு, பொட்டுக்கடலை, வேர்கடலை, தனியா ஆகியவற்றை தனித்தனியே வறுத்து, பொடி செய்து கொள்ளவும்.

இலுப்பச்சட்டியில் தாளித்து, கடலைப் பொடி கலவை, மிளகாய்பொடியுடன், ஊறிய அவலையும் போட்டு நன்கு கிளறவும். இதனுடன், மசாலா பொடி, பெருங்காயப் பொடி, உப்பு போட்டு கலக்கவும்.

இந்த கலவையில், எலுமிச்சை பழச்சாறு பிழிந்து பரிமாறவும். சுவையான, 'மசாலா அவல்' தயார். இது, சத்துமிக்க மாலை நேர உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.

- லலிதா சீனிவாசன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us