PUBLISHED ON : டிச 04, 2021

சத்து மிகுந்தது அகத்திக்கீரை. இதில், 'வைட்டமின் - ஏ' என்ற உயிர்சத்தும், புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்துகளும் ஏராளம் உள்ளன.
ரத்த கொதிப்பால் அவதியுறுவோர், அகத்திக்கீரையை சாப்பிட்டு வர குறையும்; உடலில் உஷ்ணம் அதிகரித்தால், வறட்டு இருமல், தும்மல் போன்றவை வரக்கூடும்; அகத்திக் கீரையை உண்டால் இவை சீராகும்.
கடும் வயிற்று வலி ஏற்பட்டால் அகத்திக் கீரையை வேக வைத்து, அதன் சாற்றுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம். அகத்திக் கீரையில், அரிசி கழுவிய நீர் கலந்து, சூப் தயாரிக்கலாம்; சாம்பார் செய்யலாம்.
அகத்திக்கீரையை நன்றாக கழுவி, வேக வைத்து உண்ண வேண்டும். வாயிலிட்டு நன்றாக மென்று தின்ன வேண்டும்; அரைக்குறையாக சாப்பிட்டால், அஜீரணம் ஏற்படும். இந்த கீரைக்கு விஷத்தை முறிக்கும் சக்தி உள்ளது; வயிற்றிலுள்ள புழு, பூச்சிகளை அகற்றும்.
