PUBLISHED ON : பிப் 20, 2021

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
அவல் - 2 கப்
முளை கட்டிய பாசிபயிறு - 100 கிராம்
கருப்பட்டி - 200 கிராம்
ஏலக்காய் துாள், தேங்காய் துருவல் - சிறிதளவு
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
அவலை, ரவை போல் பொடியாக்கி, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, பிசைந்து உருண்டையாக பிடித்துக் கொள்ளவும். முளை கட்டிய பாசிப்பயிறு, கருப்பட்டி, தேங்காய், ஏலப்பொடியை கலக்கவும்.
இட்லி தட்டில், அவல் உருண்டையுடன், இந்த கலவையை வைத்து ஆவியில் வேக விடவும். வெந்ததும் பொறுமையாக எடுக்கவும். இனிய, 'முளைப்பயிறு ஸ்வீட் இட்லி' தயார். புரதச்சத்து நிறைந்தது. சிறுவர், சிறுமியர் விரும்பி சாப்பிடுவர்!
- பிரியா பாஸ்கர், பெங்களூரு.

