
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களில் மட்டுமே 'லங்பிஷ்' மீனினம் காணப்படுகிறது. இவை கோடைகாலம் பூராவும் துயில் கொள்ளும் ஒரு அபூர்வ பழக்கத்தைக் கொண்டுள்ளன. வேனிற் காலத்தில் இவை வாழ்கின்ற நீர்நிலையில் நீர் வற்றியதும், இவை அடிப்பாகமுள்ள சேற்றில் படுக்கை அமைத்துக் கொண்டு அதனுள் துயில் கொள்ள ஆரம்பிக்கும். காய்ந்து போன இச்சேற்றை தோண்டி எடுக்கும் போது மண்ணோடு இம்மீனும் ஒட்டிக் கொண்டிருப்பது தெரியவரும். இந்த மண்ணைத் திரும்பவும் நீரில் விட்டால் இம்மீன் விழிப்புற்று மீண்டும் உணர்வு கொள்கிறது.