
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரறிஞர் ஜார்ஜ் பெர்னாட் ஷா. ஐரோப்பிய நாடான அயர்லாந்தை சேர்ந்தவர். ஆங்கிலப் பேரிலக்கிய படைப்புகளுக்காக, 1925ல் நோபல் பரிசுக்கு தேர்வு பெற்றார். அச்செய்தி, அன்று நள்ளிரவில், தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது.
தகவல் தெரிவித்தவரிடம், 'பரிசு பெறுவது ஒரு சாதாரண விஷயம். அதற்காக, என் அருமையான உறக்கத்தை கெடுத்துவிட்டீரே...' என்று சிரித்தபடி கூறினார் ஷா.
மக்களின் சிந்தனையை மாற்ற, எழுத்தை ஆயுதமாக கொண்ட அவருக்கு, மாபெரும் பரிசு மிகச் சாதாரணமாக தெரிந்துள்ளது.
அவர், ஐந்து நாவல்களும், 50க்கும் மேற்பட்ட நாடகங்களும் எழுதியுள்ளார். அவரது நகைச்சுவை மிகவும் பிரசித்தி பெற்றது.

