தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஸ்டைலு... ஸ்டைலு தான்!

ஸ்டைலு... ஸ்டைலு தான்!

ஸ்டைலு... ஸ்டைலு தான்!


PUBLISHED ON : பிப் 03, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சியிலுள்ள, பிரபலமான பெண்கள் பள்ளியில் படித்து கொண்டிருந்தேன். இரட்டை சடை, ஒற்றை சிவப்பு ரோஜா என்பது, என் பள்ளி வாழ்க்கையின் நிரந்தர அடையாளம்.

'ஸ்டைல் ராணி' என்ற பட்டப் பெயரும் உண்டு. தோழிகளுடன் சேர்ந்து, நிறைய குறும்புகள் செய்வேன்.

ஒருநாள், என் பள்ளி முகவரிக்கு, எனக்கு ஒரு கடிதம் வந்தது. அது ஒரு காதல் கடிதம். அதில், ஒவ்வொரு நாளும், நான் அணியும் ஆடையின் நிறம் மற்றும் அலங்காரம் பற்றி அப்பட்டமாக எழுதியிருந்தது.

அதுமட்டுமில்லாமல், 'அந்த வார சனிக்கிழமை, தன்னை சந்திக்க வர வேண்டுமென்றும், தன்னை பற்றிய அடையாளமாக சிவப்பு நிற சட்டை, வெள்ளை நிற பேன்ட் அணிந்து இருப்பேன். அப்படி நீ வராவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன் இது சத்தியம்!' என்று ரத்தக் கையெழுத்தில் எழுதி இருந்தது. கடிதத்தில், பெயர் முகவரி எதுவுமே இல்லை.

அதிர்ச்சியில் குழம்பிய என்னை கண்ட தோழியர், என்னவென்று கேட்க, மவுனமாக அந்த கடிதத்தை நீட்டினேன். உடனே, 'நாங்களும் வருகிறோம்...' என்றனர்.

சனிக்கிழமை மாலை, அவன் கூறியிருந்த இடத்திற்கு சென்றால், அங்கு, அதே அடையாளத்தில், பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். அவராக இருக்க முடியாது என்று குழம்பிய என்னை கண்டு, தோழியர் ஒருவரை ஒருவர், பார்த்து சிரித்தனர்.

அப்போது தான், 'சஸ்பென்ஸ்'சை உடைத்தனர். அடுத்த நாள் ஏப்ரல், 1ம் தேதி. என்னை, முட்டாள் ஆக்குவதற்கு அவர்கள் போட்ட திட்டம் என்று தெரிந்தது.

இச்சம்பவத்தை இப்போது நினைத்தாலும், சிரிப்பு தான் வருகிறது!

- எம்.ரகமத்துன்னிசா, திருச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us