PUBLISHED ON : ஜூலை 04, 2014
மேலை நாடுகளில் வருடத்தின் பல மாதங்களிலும் பனிப் பொழிவு இருக்கும் காரணத்தால் சூரிய ஒளி அவர்களுக்கு அதிகமாகக் கிடைப்ப தில்லை.
சூரிய ஒளி கிடைக்கும் காலங்களில் கடற்கரை நகரங்களில் வசிக்கும் ஐரோப்பியர்கள், கடற்கரை மணலில் துணியை விரித்து குறைந்த அளவிலான ஆடைகளுடன் சூரிய ஒளி உடலில் படுமாறு படுத்துக் கொள்வது வழக்கம்.
அவர்களின் அந்தப் பழக்கம் தோல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஸ்வீடனில் உள்ள லுன்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஹகன் ஆல்சன் என்பவர், பெண்கள்தான் அதிக அளவில் சூரியக் குளியலில் ஈடுபடுவ தாகவும், அதனால்தான் அவர்கள் அதிக காலம் உயிருடன் இருப்பதாகவும் தெரிவித்தார். சுமார் நாற்பதாயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தி அவர் இந்தத் தகவலைக் கண்டறிந்துள்ளார்.
சூரியக் குளியலின் போது நம் உடலில் வைட்டமின் டி உற்பத்தியாகிறது என்றும் தெரிவித்த அவர் ரத்தம் உறைவதையும், சர்க்கரை நோய் ஏற்படுவதையும் அது தடுப்பதாகவும் கூறியுள்ளார்.
