தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கடன் வாங்கி கட்டி வீடு!

கடன் வாங்கி கட்டி வீடு!

கடன் வாங்கி கட்டி வீடு!


PUBLISHED ON : டிச 12, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 12, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அகிலன் என்பவன் அரிசி மண்டி ஒன்றில் வேலை செய்து வந்தான். அவனுக்கு இரண்டு குழந்தைகள். தன் மனைவி, குழந்தைகளுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தான். அவனுக்கு மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய். அவன் மிகவும் சிக்கனமாக செலவு செய்து எஞ்சிய பணத்தை வங்கியில் சேமித்து வந்தான். அதே வேளையில், தன் குடும்பத் திற்கு வேண்டிய நியாயமான தேவைகளை நிறைவேற்றி வைத்தான்.

அவனுக்கு ஒரு லட்சியம் இருந்தது. சொந்தமாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும். அதில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே அந்த லட்சியம்.

அவனுடைய மனைவியும், 'சீக்கிரத்தில் சொந்தவீடு கட்டுங்கள்!' என்று அவனிடம் அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தாள். இதனால் அகிலனுக்கு சொந்த வீடு கட்டுவதில் ஆர்வம் அதிகமானது. அதற்கான நாள் பார்த்துக் காத்திருந்தான்.

ஒருநாள் அவன் தன் லட்சியப்படி சொந்தவீடு கட்டத் தொடங்கினான். அடிக்கல் நாட்டு விழாவிற்கு தன் உறவினர்கள் யாவரையும் அழைத்திருந்தான். அனைவரும் வந்து மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர்.

அகிலன் தன் கையில் ரொக்கமாக வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாயில் வீடு கட்டினான். இன்னும் சில பணிகள் முடிக்கப் படாமல் இருந்தன. அவன் தன்னிடமிருந்த பணத்திற்கும் மேலாக மிகப்பெரிய ஆடம்பர மான வீட்டைக் கட்டினான். அவனுடைய மனைவியும், ''நம் கையில் இருக்கும் பணத்திற் குள்ளாகவே சிறிய அளவில் வீடு கட்டலாம். அகலக்கால் வைக்க வேண்டாம். பிறகு நாம் தான் கடன் தொல்லையில் சிக்கிக்கொண்டு விழிக்க நேரிடும்,'' என்று கூறினாள்.

அகிலன் தன் மனைவி கூறியதை சிறிதுகூட காதில் வாங்கிக் கொள்ளவில்லை. வெளியி லிருந்து பத்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி னான். ஒரு வழியாக மிகவும் பிரமாண்டமான வீட்டையும் கட்டி முடித்து விட்டான்.

ஒரு நல்லநாள் பார்த்து வீட்டில் பால் காய்ச்சி மகிழ்ச்சியோடு அந்த வீட்டில் குடியேறினர். இப்படியே ஒரு மாதம் கடந்தது. கடன் வாங்கிய பத்து லட்ச ரூபாய்க்கு வட்டி கட்ட வேண்டிய சூழல். அகிலனின் மாத வருமானம் வட்டி கட்டக்கூட போதவில்லை. அகிலன் மிகவும் கலங்கினான்.

வெளியில் கடன் வாங்கி மிகப்பெரிய வீட்டைக் கட்டுவதை விட, கையில் இருக்கும் சொந்தப் பணத்தில் சிறிய வீடு கட்டலாம் என்று கூறிய தன் மனைவியின் பேச்சு அப்போது அவனுடைய நினைவுக்கு வந்தது. தலைக்கு மேல் வெள்ளம் வந்த பிறகு சாண் என்ன? முழம் என்ன?

அகிலனுக்கு தான் ஆசையாகக் கட்டிய, ஆடம்பரமான வீட்டை விற்பதைத் தவிர கடன் அடைக்க வேறு வழியில்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இடம் அதிகமாக இருக்கும்படி தான் அவசரப்பட்டு பெரிய வீட்டைக் கட்டியது தவறு என்பதை அவன் அப்போது உணர்ந்தான்.

கடன்காரர்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போனது.

வேறுவழியில்லாமல், வீட்டை விற்று வந்த பணத்தில் அகிலன் கடன்காரர்களுக்கு வட்டியும், முதலுமாகக் கொடுத்து விட்டு, மீண்டும் தன் குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் குடியேறினான்.

அளவுக்கு மீறி ஆசைப்பட்டால் இப்படிதான் அவஸ்தை படவேண்டும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us