தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பெர்னாட்ஷா செய்த தமாஷ்!

பெர்னாட்ஷா செய்த தமாஷ்!

பெர்னாட்ஷா செய்த தமாஷ்!


PUBLISHED ON : ஆக 09, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவநாகரிகப் பெண் ஒருத்தி, பெர்னாட்ஷாவைப் பார்க்க வந்திருந்தாள். அப்போது அவள் ஷாவிடம், ''மிஸ்டர் ஷா என்னைப் பார்த்தால் எனக்கு எவ்வளவு வயதிருக்கும் என்று எண்ணுகிறீர்கள்?'' என்று கேட்டார்.

ஷா ஒரு தடவை அந்த அம்மாவை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு அவர் புன்னகைப் பூத்தவாறு, அந்தப் பெண்ணிடம், ''அம்மணி, உங்களின் பல்லைப் பார்த்தால், பதினெட்டு வயது இருக்குமென்று தெரிகிறது. உங்களின் தலைமுடியைப் பார்த்தால், பத்தொன்பது வயது இருக்கலாமோ என்று தெரிகிறது. நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால், பதினான்கு வயது பெண் என்று நினைக்கத் தோன்றுகிறது,'' என்றார்.

இதைக் கேட்ட அந்தப் பெண் மிகவும் சந்தோஷமடைந்தாள். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அந்தப் பெண் மீண்டும் ஷாவிடம், 'என் வயது என்ன வென்று திட்டவட்டமாகச் சொல்ல முடியுமா?' எனக் கேட்டாள்.

அதற்கு ஷா, கொஞ்சமும் தாமதிக்காமல், 'சரி, சரி, 18,19,14 இம்மூன்று எண்களையும் கூட்டிப்பாருங்கள் அம்மா, 51 வரும். அதுதான் உங்கள் வயது என்று குறும்பாகச் சொன்னாரே பார்க்கலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us