தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கனிவுடன் கற்பி!

கனிவுடன் கற்பி!

கனிவுடன் கற்பி!


PUBLISHED ON : செப் 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1969ல், 8ம் வகுப்பு தமிழ் வழியில் படித்தேன். ஆங்கில ஆசிரியராக இருந்தார் கே.மதுரநாயகம். பாடப் புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதியை ஒவ்வொருவராக வாசிக்க சொல்லி, தவறுகளை திருத்தம் செய்வார்.

எனக்கு ஆங்கிலம் பிடிக்காது. வேப்பங்காய் போல கசக்கும். பாடவேளையில் வகுப்பை, 'கட்' அடிப்பேன். ஒருநாள் என்னை ஓய்வு அறைக்கு வர சொன்னார். பயத்தில், கை, கால்கள் உதற தயங்கியபடி சென்றபோது, அன்பு காட்டியது நெகிழ்வு தந்தது. புத்திமதிகளுடன், 'ஆங்கிலம், பிறமொழிகளை விட மிகவும் எளிது. இதில், 26 எழுத்துக்கள் தான் உள்ளன. எனினும் அது கடல் போன்றது; புரிந்தால் சுலபமாக படித்து விடலாம்...' என தட்டிக் கொடுத்தார்.

பின், ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளேடுகளை வாங்கி வந்து முதலில் தமிழ் செய்திகளை படிக்கச் சொல்வார். தொடர்ந்து, அது தொடர்பான ஆங்கில செய்திகளை வாசிக்க சொல்வார். உணவு இடைவேளையில், ஓய்வெடுக்காமல் இதுபோல் பயிற்சி கொடுத்தார். அந்த ஊக்கத்தால் படித்து உயர்ந்தேன். அரசு பள்ளியில், ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணி கிடைத்தது.

எனக்கு, 66 வயதாகிறது. பரிவுடன் கற்றுத்தந்த அந்த ஆசிரியரை மனதில் பதித்துள்ளேன். அவர் பாணியை பின்பற்றி வகுப்பறையில் சிறப்பாக கற்பித்து ஓய்வு பெற்றேன்.

- கே.ராஜேந்திரன், கடலுார்.

தொடர்புக்கு: 80569 91757


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us