PUBLISHED ON : ஜூன் 14, 2013
அ நிறம் | அளவு
இஸ்ரேலில் உள்ள நெகேவ் பாலைவனத்தில், 'ஆல்கே' என்னும் சிறு தாவரத்தை வளர்க்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகளும், சஹாரா பாலைவனத்தை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளும், பாலை வனத்தில் வீசும் கடுமையான சூரிய ஒளி சக்தி மூலம் அதிகமான மின் ஆற்றலைப் பெற முடியும் என்று நிரூபித்துள்ளனர். இந்த மின் ஆற்றல் மூலம் பாலைவனப் பகுதியில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து, சுலபமாகத் தண்ணீர் எடுக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
மாஸ்கோ நகரிலுள்ள கட்டடக்கலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் பாலைவன மணலில் வீடு கட்ட முடியும் என்று நிரூபித்துள்ளனர். பாலைவன மணலை 300 முதல் 900 டிகிரி சென்டிகிரேட் வரை சூடுபடுத்தும்போது அந்த மணல், வீடு கட்டுவதற்கு உகந்ததாக மாறுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
