PUBLISHED ON : நவ 27, 2015

அ நிறம் | அளவு
மீன்களில், 'லயன் பிஷ்'னு ஒரு இனம் இருக்கு. இது கடக, மகர ரேகை களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உள்ள கடல்களில் அதிகம் இருக்கும். இதன் உடம்பின் மூன்று பக்கங்களிலும் வெவ்வேறு வடிவிலான துடுப்புகள் இருக்கும். முதுகுப்புறத்தில் உள்ள துடுப்பில், விஷத்தை சுரக்கும் சுரப்பி இருக்கும். இந்த விஷத்தை எதிரியின் மேல் உமிழ்ந்து விடும்.
இந்த விஷம் எதிரியின் உடலின் உள்ளே சென்று, வாந்தியை ஏற்படுத்தும். சில நேரங்களில் இவ்விஷம் எதிரியை சாகடித்து விடும். இந்த விஷத்தைக் கொண்டு மருந்துகள் தயாரிக்க, ஆராய்ச்சி செய்து வருவதால் இந்த மீன் அதிக அளவில் தேவைப்படுகிறது.
