தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/யானை என்னும் பிரமாண்டம்!

யானை என்னும் பிரமாண்டம்!

யானை என்னும் பிரமாண்டம்!


PUBLISHED ON : அக் 19, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆப்பிரிக்க யானையின் வடிவில் சற்றே சிறுத்த யானை தான் நம் இந்திய யானை. யோசின் காலகட்டம் என்பது 50 மில்லியன் (1 மில்லியன்-10 லட்சம் ஆண்டுகள்) ஆண்டுகளுக்கு முந்தைய காலம். அப்போது இருந்து வாழ்ந்து வந்த இந்த யானையின் வரிசை இன்று இந்திய யானை, ஆப்பிரிக்க யானை என்று இரண்டே இரண்டுடன் நின்று விட்டது. மற்ற அனைத்தும் அம்பேல்.

பிரோபோசிடீயன்கள் என்றால் யானை மற்றும் யானையை போலவே பெரிய விலங்குகளின் வரிசையை சொல்வதாகும். இவற்றில், பாதி மீட்டர் உயரமே உடைய கலவையான மோயரி தெரியம் விலங்கும் உண்டு. இந்த வரிசையில் பெரிய விலங்குகளின் வரிசைகள் இடம் பெற்றுள்ளன. இவைகளுக்கு வலுவான தந்தங்களும், நீண்ட தும்பிக்கையும் இருந்தன. மிகப்பெரிய யானை என்பது தோள் வரை 4.5 மீட்டர்கள் உயரமும், 18 மெட்ரிக் டன்கள் எடை இருக்கலாம் என கருதப்பட்ட மமோத் யானையாகும். இது பழங்கால படிமங்களால் அறியப்பட்டது. யானைகள் குழுவாய், குடும்பமாய் வாழும். அதிகமான புத்திசாலித்தனம் உடையவை. இந்த யானைகள் இதன் விலை மதிப்பற்ற தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டு இன்று அரிதாகி பல இன வகைகளை இழந்து இரண்டுடன் நின்றுள்ளது.

வடிவம் மாறும் மண்டை ஓடுகள்!



* மோயரிதெரியம்-நீண்ட தலை, உணவை அரைக்க உதவும் எளிய மோலார் பற்கள், தந்தம் போன்ற உளி பற்கள்.

* பியோமியா-நன்கு வளர்ந்த தந்தங்கள், அதோடு இன்றைய யானைக்கு இருப்பது போன்ற மண்டை ஓடு.

*கோம்போதெரியம் - நீண்ட மண்டை ஓடு மற்றும் நீண்ட தந்தங்கள். இவை இரண்டும் தாடைகளில் இருந்து நீண்டு காணப்படும்.

* கம்பளி போன்ற முடியுடைய மாமோத் (யானை போன்ற பெரிய விலங்கு) இதற்கு பெரிய வரிசையற்ற பற்கள் இருந்தது. இதன் மூலம் அவை பறிப்பது, அரைப்பது ஆகியவற்றை எளிதில் செய்தன.

* அனான்கஸ் பெலிஸ்டோசின் காலகட்டத்தின் தொடக்கம் வரை இவை ஆசிய, ஐரோப்பிய காடுகளில் வாழ்ந்தன. இவைகளின் தந்தங்கள் 3 மீட்டர்கள் இருந்தன.

* பியோமியா விலங்கு வடக்கு ஆப்பிரிக்காவில் ஒலிகோசீன் காலகட்டத்தில் வாழ்ந்தன. ஒரு மீட்டருக்கு மேல் உயர் உடைய இவை ஏரி மற்றும் நதிகளின் அருகே வளரும் மிருதுவான் தாவரங்களை உணவாக்கி கொண்டன.

* பிளேட்டிபெலோடன்: ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா ஆகிய இடங்களில் மத்திய-மயோசின் காலகட்டத்தில் காணப்பட்டது. பயிர்களை கூண்டோடு காலி பண்ண தந்தங்களை பயன்படுத்தின.

* மொயரிதெரியம் என்னும் இந்த விலங்கு மிக தொன்மையான காலத்தில் வட ஆப்பிரிக்காவில் வாழ்ந்தன. இவை நீண்ட மூக்கும் சாம்பல் நிறமும் கொண்ட தென் அமெரிக்க டாபிர் விலங்கினை போல இருந்தது. நீர் கரையோர புற்களே இந்த பாப்பாவின் உணவு.

* ஸ்டெகோடன் கிழக்கு ஆசியாவில் மத்திய பெலிஸ்டோசின் காலம் வரை வாழ்ந்தன. 2 முதல் 3 அடி உயரமும், பெரிய தந்தங்களும் கொண்டவை.

* கோம்போதெரியம் 1.8 முதல் 2.4 வரை உயரம். இவை மையோசின் காலகட்டத்தின் பிற்பகுதியில் ஆசியா, ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்காவிற்கு பரவியது.

* இந்த அமெரிக்க மாஸ்டோடன் விலங்கு மத்திய பெலிஸ்டோசின் காலம் முதல் ஹோலோசின் காலம் வரை வாழ்ந்தன. ஆண் யானையின் தோள் உயரம் 3 மீட்டர்களாக இருந்தது.

* கம்பளி மூடப்பட்டது போன்ற முடியால் போர்த்தப்பட்ட இந்த மாமோத் குகை மனிதர்களால் வேட்டையாடப்பட்டது. இவை குளிரான வடக்கு பகுதிகளில் காணப்பட்டது. 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் இவ்வினம் அழிந்தது.

* டெயினோதெரியம் - தோள் வரை 3 மீட்டர் உயரம். தன் தந்தங்களை தாவரங்களை வேரறுக்க பயன்படுத்தின. இவை பெலிஸ்டோசின் காலகட்டத்தின் ஆரம்பம் வரை வாழ்ந்தன.

* நவ்மேன் யானை பெலிஸ்டோசின் கால கட்டத்தின் முடிவு வரை இவை கிழக்கு ஆசியா மற்றும் ஜபபானில் காணப்பட்டது. இந்த தொன்மையான காட்டு வசிப்பாளர் 2.5 முதல் 3.5 மீட்டர்கள் உயரம் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us