PUBLISHED ON : நவ 02, 2012

அ நிறம் | அளவு
இன்று நாம் பயன்படுத்தும் குண்டூசியானது பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு காலத்தில் குண்டூசிகள் வெறும் முள்ளாகவே இருந்தன. சில சமயங்களில் கடல் சிப்பிகளின் உடைந்த பாகங்கள், மீன் முள்கள் ஆகியவற்றையும் குண்டூசியாக பயன்படுத்தினர்.
பெரிய பணக்காரர்கள் குண்டூசியை உலோகங்களினால் உபயோகித்தனர். மேலும் விழாக்காலங்களில் பரிசாக கொடுத்தும் மகிழ்ந்தனர்.
முதலில் உருவான குண்டூசிகளில் தலை கிடையாது. அதற்கு பதிலாக ஊசியின் நுனியில் ஒரு துவாரமிட்டு, அந்த துவாரத்தினூடே ஒரு சிறிய துண்டு உலோகத்தை செலுத்தி குண்டூசியாகப் பயன்படுத்தினர். காலங்கள் மாற, மாற பல வகை குண்டூசிகள் உண்டாயின. புரூச், ஸேப்டி பின், பின்ஸ்குரு, கிளிப்பின் போன்றவை இன்று உபயோகத்திலிருக்கின்றன.
