தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வரப்பு உயர...!

வரப்பு உயர...!

வரப்பு உயர...!


PUBLISHED ON : ஜன 25, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 25, 2013


Follow on Google
அ நிறம் | அளவு

பாண்டிய அரசரின் பிறந்த நாள் விழா சீரும் சிறப்புமாக நடந்தது. அவரை வாழ்த்துவதற்காக நிறைய புலவர்கள் வந்திருந்தனர். அந்த கூட்டத்தில் அவ்வையாரும் இருந்தார்.

அரசரை வாழ்த்த புலவர் ஒருவர் மேடை அருகே சென்றார்.

''அரசே! எல்லா வளமும், நலமும் பெற்றுப் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க,'' என்று வாழ்த்தினார்.

அடுத்த புலவர், ''என்றுமுள தென்தமிழ் போல இளமை குன்றாமல் நிலைத்து வாழ்க,'' என்று வாழ்த்தினார்.

இப்படியே, ஒவ்வொரு புலவராக அரசரை வாழ்த்தினர்.

அவ்வையாரும் மேடை அருகே சென்றார்.

''வரப்பு உயர...'' என்று அரசரை வாழ்த்தினார்.

அங்கிருந்த புலவர்கள் அவர் வாழ்த்தியதன் பொருள் புரியவில்லை.

தெளிவு பெற நினைத்த அவர்கள், ''அவ்வையாரே! 'வரப்பு உயர' என்று அரசரை வாழ்த்தினீர்களே... அதன் பொருள் என்ன?'' என்று கேட்டனர்.

''புலவர்களே! வரப்பு உயர்ந்தால், தண்ணீர் உயரும்; தண்ணீர் உயர்ந்தால், நெல் விளைச்சல் உயரும்; நெல் விளைச்சல் உயர்ந்தால், மக்கள் வளமாக வாழ்வார்கள். மக்கள் வளமாக வாழ்ந்தால் அரசர் பெருமை பெறுவார். அதனால்தான் அப்படி வாழ்த்தினேன்,'' என்று விளக்கம் தந்தார்.

இதைக் கேட்ட அவர்கள் அவ்வையாரின் புலமைத் திறத்தைப் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us