PUBLISHED ON : நவ 07, 2014

அ நிறம் | அளவு
கொலராடோ ஆற்றின் குறுக்கே 1930-36ல் கட்டப்பட்ட இந்த ஹூவர் அணைக்கட்டின் உயரம் 720 அடியாகும். ஹெர்பட் ஹூவர் என்ற அமெரிக்க அதிபரின் நினைவாகக் கட்டப்பட்டதால் அவர் பெயர் இதற்கு சூட்டப்பட்டாலும், இதற்கு 'பவுல்டர் அணை' என்ற மற்றொரு பெயரும் உண்டு. பவுல்டா என்றால், மழை, சூறாவளி, புயல் காற்றினால் சேத மடைந்து, தேய்வடைந்த பாலம் என்று அர்த்தம். ஒருவேளை, காலச்சுழற்சி யாலும், இயற்கையின் தாக்குதலாலும், இந்தப் பாலம் அப்படிக் காட்சியளிக் கிறதோ என்னவோ. அமெரிக்க அரசால் தேசிய வரலாற்றுச் சின்னமாக 1985ம் ஆண்டில் ஹூவர் அணை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
