PUBLISHED ON : டிச 04, 2015

அ நிறம் | அளவு
உடல் பருமனான நபர்கள் உலக மெங்கும் உண்டு. ஆனால், இங்கு நீங்கள் பார்க்கும் குண்டு மனிதர் வித்தியாசமானவர். 'டேனியல் லாம்பர்ட்' என்பது இவர் பெயர். இங்கிலாந்துவாசி; லீசெஸ்டர் என்னுமிடத்தில் 1770ம் ஆண்டு பிறந்தவர். 1793ல் இவரின் எடை 442 பவுண்டுகள். தகப்பனாருக்கு உதவியாக உள்ளூர் சிறையில் பணியாற்றி வந்தார்.
இவரது உடல் 1805ம் ஆண்டு வாக்கில் ஏகமாகப் பெருந்து விடவே, தான் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு, தன்னுடைய உடலையே காட்சிப் பொருளாக்கிச் சம்பாதிக்கத் தொடங்கினார். அதில் வியப்பில்லை. அப்படியொன்றும் இவர் பெருந் தீனிக்காரரும் அல்ல. சுறு சுறுப்பான வாழ்க்கையை மேற் கொண்டவர்தான். திடீரென்று, 1809ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி 'டேனியல் லாம் பர்ட் ஸ்டாம் போர்டு' என்னுமிடத்தில் இறந்து போனார். அப்போது அவர் உடல் எடை 757 பவுண்டுகள்.
