தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முள்!

முள்!

முள்!


PUBLISHED ON : செப் 07, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 07, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மன்னன் சங்கவரதன், துர்வபுரி என்ற நாட்டை ஆண்டு வந்தான். கொடூர மனம் படைத்தவன்; சின்னச் சின்ன தவறுகளுக்கும், மிகப்பெரிய தண்டனை கொடுப்பான். ஓய்வு நேரங்களில், தோட்டத்தில் உலாவுவான்.

ஒரு நாள் தோட்டத்தில் உலாவிய போது, காலில் முள் குத்தி விட்டது. 'ஆ...' என்று அலறி துடித்தான். மருத்துவர் சிகிச்சையளித்தார்; காயத்தில், மருந்து வைத்துக் கட்டப்பட்டது.

மிகுந்த கோபம் அடைந்த மன்னன், தோட்டப் பணியாளர்கள், அத்தனை பேருக்கும், தண்டனை கொடுத்தான்.

ஒருவாரத்திற்குப் பின், மீண்டும் தோட்டத்திற்கு சென்றவன், ''என் காலில் முள் குத்தினால், உடனே துாக்கிலிடப்படுவீர்...'' என, பணியாளர்களை எச்சரித்தான்.

அதனால், பணியாளர்கள், நடுக்கத்துடன் தோட்டப் பாதைகளை சீர் செய்தனர்; ஆனாலும், மன்னன் காலில், முள் குத்தவே செய்தது.

அன்று, தோட்டப்பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் அனைவரையும், மன்னன் கட்டளைப்படி துாக்கிலிட்டனர். இது, தொடர் கதையானது. தோட்டத்தில் துப்புரவு பணி செய்ய யாரும் முன் வரவில்லை; சிலரை கட்டாயாமாக பணியில் ஈடுபட வைத்தனர். அவர்களும் தண்டனை பெற்றதால், அதிருப்தி அதிகமானது.

இதற்கு முடிவு கட்ட, மதிமந்திரியை சந்தித்து, மக்கள் முறையிட்டனர். முறையான முடிவு எடுப்பது பற்றி சிந்தித்தார், மந்திரி.

அன்று, தோட்டத்திற்கு மன்னன் உலாவப் போனான்.

உடன் சென்ற மந்திரி, ''அரசரே... போர்க்களம் செல்லும் போது, மார்புக்கும், உடலின் ஏனைய பாகங்களுக்கும் கவசம் அணிந்து கொள்கிறோம் இல்லையா... அதுபோல, கால்களுக்கும் கவசம் அணிந்து கொண்டால், முள்குத்தாது அல்லவா...'' என்றார்.

மன்னன் யோசித்து, ''ஆம் அமைச்சரே... இதுபற்றி சிந்திக்கவேயில்லையே...'' என்றவன், உடனே தோலில் செருப்பு செய்ய உத்தரவிட்டான்.

சில நாட்களிலேயே, மன்னனுக்கு செருப்பு தயாராகி விட்டது. மதி மந்திரியால் உயிர் பிழைத்த பணியாளர்கள் நன்றி கூறினர்.

குட்டீஸ்... மந்திரியை போல சிறப்பாக சிந்தித்து, கஷ்டப்படுறவங்களை காப்பாற்றணும். சரியா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us