தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அந்த கற்கள்!

அந்த கற்கள்!

அந்த கற்கள்!


PUBLISHED ON : பிப் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருவன் அம்பானியை போல மிகப் பெரிய தொழிலதிபராக வேண்டும் என்று ஆசைபட்டு, தன் சக்திக்கு மீறிய வியாபாரம் ஒன்றை துவங்கினான்; அதில் கஷ்டப்பட்டு உழைக்கவும் செய்தான். ஆனால், சரியாக திட்டமிட தெரியாததால், அம்பானி ஆவதற்கு பதிலாக, ஆண்டியாகி போனான்.

ஏகப்பட்ட கடன்; வட்டி கட்ட முடியவில்லை. குடும்ப சக்கரம் சுழலாமல் தடைப்பட்டது. குடும்பம் ஏழ்மையில் தவித்தது. இதனால், வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள், தினமும் வந்து அழுத்தம் கொடுத்ததால், அவன் நிம்மதி சுத்தமாக போய் விட்டது.

அடுத்து என்ன செய்வது என்ற கவலை அவனை அரித்து தின்றது. இதற்கு மேலும், தாக்கு பிடிக்கவே முடியாது என்று தோன்றிற்று.

ஒருநாள் இரவு -

வீட்டுக்கு செல்ல விருப்பமில்லாமல் ஆற்றங்கரைக்கு சென்று அமர்ந்தான். அவன் மனம் முழுவதும் கடன் சுமையை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தது.

அப்போது, இருட்டில் அவன் கைக்கு எட்டுகிற தொலைவில் ஒரு சிறிய கூழாங்கற் குவியல் தட்டுப்பட்டது. அதை எடுத்து ஆற்றில் ஓடி கொண்டிருந்த தண்ணீருக்குள் வீசியெறிந்தான். இவ்வாறு அவன் மனம் கவலையில் உழன்று துடிக்க, கூழாங்கற்களை தண்ணீருக்குள் விட்டெறிந்து கொண்டே இருந்தது கை.

இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்தபடியே, சிந்தனையில் தவித்து கொண்டிருந்தான்.

திடீரென்று பார்த்தால் கிழக்கே கதிரவன், தன் கதிர்களை பரப்ப துவங்கினான். விடிந்த பின், அவன் மிகுந்த அதிர்ச்சியடைந்தான். ஏனெனில், அங்கிருந்த கற்குவியலில் இப்போது ஒரேயொரு கல் மட்டுமே மிஞ்சியிருந்தது.

அத்தனை கற்களையும் ஆற்றுக்குள் எறிந்திருப்பது, அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. கடைசியாக இருந்த கல்லையும் ஆற்றுக்குள் வீசப்போனவனுக்கு ஒரு சந்தேகம் முளைவிட்டது. விடிந்து விட்டதால், நன்றாக சூரிய வெளிச்சம் பரவியிருந்தது. இதனால், அந்த கல்லை அவனால் நன்றாக பார்க்க முடிந்தது.

அதை திருப்பி திருப்பி பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான். காரணம், அது சாதாரண கூழாங்கல் அல்ல... விலை உயர்ந்த வைரக்கல்.

இரவு முழுவதும் இந்த வைரக்கற்களை, கூழாங்கற்கள் என்று எண்ணி ஆற்றுக்குள் விட்டெறிந்ததை எண்ணி நொந்து போனான்.

கஷ்ட நேரத்தில் நாம் மிகவும் கலங்கி போனால், நம்முடைய நிதானத்தை இழந்துவிடுவோம். எனவே, என்ன கஷ்டம் வந்தாலும் அதை தைரியமாக எதிர்த்து நின்றால், வெற்றி பெறுவது நிச்சம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us