தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/காலம் செய்த உதவி!

காலம் செய்த உதவி!

காலம் செய்த உதவி!


PUBLISHED ON : ஜூலை 18, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில், 1985ல், 8ம் வகுப்பு முடித்து, உயர்நிலையில் கல்வியை தொடரவிருந்தேன். உடன் படித்த தோழி சுமதி, வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்தாள்.

சான்றிதழ் வாங்க வந்திருந்தார் அவளது அம்மா. அவரிடம் விவரம் கேட்ட, வகுப்பு ஆசிரியை சூசானம், 'மேற்படிப்புக்கான செலவு முழுவதையும் ஏற்று கொள்கிறேன்... படிப்பை தொடர வையுங்கள்...' என, வாக்கு கொடுத்தார்.

அதன்படி, பள்ளியில் சேர்ந்த தோழி, நன்றாக படித்து பிளஸ் 2 தேர்வில், 1120 மதிப்பெண் பெற்றாள். செவிலியர் பயிற்சி முடித்து, கோவை, அரசு மருத்துவமனையில் பணி செய்து வருகிறாள்.

காலத்தில் செய்த உதவி, ஒரு குடும்ப அமைப்பையே மாற்றி விட்டது கண்டு வியந்தேன். அந்த ஆசிரியையின் செயல், பசுமரத்தாணி போல் மனதில் பதிந்தது. அதுபோல, உதவி செய்து வாழ வேண்டும் என, உறுதி ஏற்று செயல்படுத்தி வருகிறேன்.

என் வயது, 47; தோழியை சந்திக்கும் போதெல்லாம், அந்த ஆசிரியையை நினைத்து போற்ற தவறுவதில்லை.

- பா.ஜேனட், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us