தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொக்கிஷம் (11)

பொக்கிஷம் (11)

பொக்கிஷம் (11)


PUBLISHED ON : ஜூன் 26, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: சின்னதம்பி, அவன் தாய் மீனாட்சி, வாண்டு, வாண்டுவின் அம்மா நால்வரும் காட்டில் ஒரு பெரியவரின் குடிசைக்கு சென்று தங்கினர். மந்திராஜா விதவிதமான பழங்களுடன் அவர்களை உபசரித்தது. இனி-

அனைவரும் கலவரமடைந்தனர். பெரியவரே சற்று அதிர்ச்சி அடைந்தவர் போல் காணப்பட்டார். வாசலில் பல குதிரைகளின் நடமாட்டம் இருப்பதாக பெரியவர் உணர்ந்தார். தன் குதிரைகளுக்கு ஏதாவது ஆபத்து நேருமோ என்று மீனாட்சி அஞ்சினாள்.

பெரியவர் ஆபத்தை உணர்ந்தவராக மந்தி ராஜாவை பார்த்தார். அதுவும் விவரம் புரிந்து கொண்டு பெரும் ஓசை ஒன்றை எழுப்பியது. மலைக்காட்டின் மரத்திலும், மலையிலும் உள்ள அத்தனை வானரங்களும் கிளைக்கு, கிளை தாவி ஆயிரக்கணக்கில் பெரும் குரலிட்டபடி பெரிய வரின் குடிலுக்கு வரவும், அந்த குரங்குகளின் பிடியில் இருந்து தப்பிக்கும் பொருட்டு பல குதிரை களின் காலடி சத்தம் திரும்பி செல்லும் ஒலியும் கேட்டது. சற்று நாழிகையில், பெரும் நிசப்தம். மீனாட்சியின் இரு குதிரைகள் மட்டும் விடாமல் கத்தியது.

ஓ! இவைகள் குரங்குகளுக்கு பயப்படு கின்றன என்று நினைத்த பெரியவர் உடனே மந்திராஜாவை பார்த்தார். அது மீண்டும் ஒரு குரல் கொடுத்தது.

இப்போது அனைத்து குரங்குகளும் தத்தம் இடத்திற்கு திரும்பி போய் விட்டன. உடனே பெரியவர் கட்டளை இட மந்திராஜா குடிசை யின் கதவை வேகமாக உலுக்கி திறந்தது.

இரண்டு குதிரைகளும் நடுங்கியபடி இருந்தன. மீனாட்சி சென்று அவைகளை தட்டி பின் பெரியவரிடம் தானியம் பெற்று அவை களுக்கு கொடுத்து உற்சாகப்படுத்தினாள்.

இத்தனை வருடங்கள் இல்லாமல் இந்த இடத்தில் இப்போது யார் வந்திருக்கக்கூடும். பெரியவர் யோசித்தார். அவர் யோசனைக்கு முடிவுகாண வேகமாக புறப்பட்டது மந்திராஜா.

அங்கே, குதிரையில் இருந்து இறங்கிய குணாளனின் வீரர்கள் ஒரு இறுக்கத்துடன் இருப்பதையும், அவன் ஒற்றனும், ஏவலாளியு மான மெய்யன்பன் நடுநடுங்கி நிற்பதையும் பார்த்தான்.

''ஏ வீரனே! யாரை இப்போது வழி அனுப்பி வைத்தாய். உன் கலவர முகத்துக்கு என்ன காரணம்?''

மெய்யன்பன் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான். குணாளனுக்கு கோபம் தலைக்கேறி மெய்யன்பனை, 'பளார்' என்று கன்னத்தில் அறைந்தான்.

''ஏண்டா மதி கெட்டவனே. மற்ற வீரர்கள் மேலை நாட்டவர். நீ இந்த விஜயபுரியின் மைந்தன்தானே. உனக்கு அறிவு வேண்டாம். ஒரு சிறுவன் கூறியதை வைத்து இப்படி ஏமாந்து வெட்கம் கெட்டு நிற்கிறாயே. நீ ஒரு வீரனாக இருக்க கூட தகுதி இல்லை. பின் எப்படி உன்னால் உளவு வேலை பார்க்க முடியுமாம்!''

''தலைவா மன்னித்து விடுங்கள்!''

''அதை பிறகு பார்த்துக்கொள்கிறேன். வந்தவர் யார் என்று கூறினர்?''

''இரு சிறுவர்கள். மற்றும் ஒரு சிறுவனின் தாய்!''

''சரி. அந்த சிறுவன் பெயர் தெரியுமா?''

''வந்து...ம் ஒருவன் சின்னதம்பியாம். அடுத்தவன் வாண்டுபயலாம்!''

''வெட்கம்... வெட்கம்... போயும் போயும் இந்த வாண்டு பயல்களிடம் ஏமாந்து நம் தளபதியின் சாணக்கியத்தனத்திற்கும், ராஜ தந்திரத்துக்கும் அவமானம் ஏற்படுத்தி விட்டாயே... சரி அவர்கள் சாதுரியமாக இரு குதிரைகளில் சென்றாக கூறினாய் அல்லவா? அந்த குதிரைகள் எப்படி இருந்தன?''

''ஒன்று ராஜ கம்பீரம். அடுத்ததோ உருவத்தில் சிறியது. ஆனாலும் காற்றோடு காற்றாகி கலந்து பாயும் திறன் மிக்கது. காரணம் மேலை நாட்டு குதிரைகள்!''

''இரண்டு குதிரைகளை ஓட்டி சென்றது யார்?'' படபடப்புடன் கேட்டான் குணாளன்.

''பெரிய குதிரையில் சின்னதம்பியின் தாயும், சின்ன குதிரையில் சின்னதம்பியும் சவாரித்து சென்றனர்!''

''அந்த மேலை நாட்டு குதிரைகளில் சவாரி செய்யும் அளவுக்கு அந்த பெண்ணுக்கு எப்படி பயிற்சியும், வீரமும் வந்தது. அப்படி என்றால் அவைகள் நம்நாட்டு குதிரைகளாக இருக்கலாம் அல்லவா?''

''இல்லை பிரபு. அவைகள் நாங்கள் கொண்டு வந்த குதிரைகள்தான். அதை மெய்ப்பிக்கும் விதமாக இந்த குதிரைகளை ராஜ தந்திரிதான் கொடுத்து அனுப்பினார் என்றும் சின்னதம்பி கூறினான். அதை வைத்துதான் நான் முழுவதும் நம்பி விட்டேன்!''

''அவர்கள் சரியாக குதிரைகளில் இந்த இடத்துக்கு வரக் காரணம், அந்த வாண்டு பயலின் அம்மாவை அழைத்துப் போகவே. அப்படி என்றால் நிச்சயம் எல்லாம் விளங்கி விட்டது. ராஜ தந்திரி தேடச்சொல்லிய இரு உளவாளிகளின் மனைவியும் மகன்களும் தான் அவர்கள். நம்மை விட நம் எதிராளி மிகவும் கெட்டிக்காரன் என்று நிரூபித்து விட்டான்!''

''சிறு வாண்டு பயல்களே உ<ங்களை ஏமாற்றி இன்னொரு உளவாளியின் மனைவியை தப்பிக்க செய்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு வலிமையான கூட்டத்தை சேர்ந்தவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். நாம் உடனே செய்ய வேண்டியது அவர்களை பிடித்து விசாரிக்க வேண்டும். மேலை நாட்டானின் ஒரு கப்பல் எரிக்கப்பட்டது என்றால் தளபதியே அஞ்சி விடுவார்.

''நிச்சயம் அதை ராஜதந்திரியோ அல்லது குறும்படைத்தலைவனோ செய்திருக்க மாட்டார்கள். இது நம் எதிரியின் செயல் என்பது உறுதியாகிவிட்டது.

''அத்துடன் அந்த இன்னொரு கப்பலை பார்த்ததாக நம் உளவாளி கூறியதில் இருந்து ஒன்று தெரிகிறது. நிச்சயம் அந்த கப்பலில் அந்த எதிரிகள் தான் பயணித்திருக்க வேண்டும். நிச்சயம் ராஜ தந்திரியாகவோ அல்லது குறும்படைத் தலைவனாகவோ இருக்க முடியாது. காரணம். அவர்கள் உங்களை விட்டு செல்ல மாட்டார்கள். ம்...ம்...'' இப்போது குணாளனுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

''அய்யோ அப்படி என்றால் ராஜதந்திரியும், குறும்படைத்தலைவனும் என்ன ஆனார்கள்?' யோசித்தவன், சட்டென ஒரு முடிவெடுத்தான்.

''சரி உடனே புறப்படுங்கள். நாம் அய்யனார் கட்டடம் சென்று, படகில் கங்கை கட்டத்தை அடைவோம். அங்கு ஒரு மீனவன் குடும்பத்துடன் குடிசையில் வாழ்கிறான். அவன் வாழ்வும் நடமாட்டமும் சந்தேகம் அளிக்கும்படி இருப்பதாக நம் தளபதியின் ஒற்றன் ஒருவன் ஏற்கனவே கூறியிருந்தான். அவன் அந்த குடிசையில் இருக்கிறானா என்பதை முதலில் உறுதி செய்து கொள்வோம். பிறகு மற்றவைகளை பற்றி யோசிப்போம்,'' என்ற குணாளன் உடனே அய்யனார் படித்துறை வந்தான்.

அங்கே ஒரு படகு கட்டப்பட்டு இருப்பதை கண்டான்.

''நீங்கள் அனைவரும் உடனே இதில் பயணித்து கங்கை படித்துறை வாருங்கள். நான் குதிரையில் வேகமாக வந்து சேருகிறேன். புறப் படுங்கள்,'' என்று கட்டளை கொடுத்து அந்த நால்வரும் படகில் ஏறி துடுப்பு வலிப்பதை பார்த்துவிட்டு வேகமாக தன் குதிரையில் ஏறினான்.

''அடே வாண்டு பயலுகளா? இப்போது வேண்டுமானால் நீங்கள் ஏமாற்றி இருக்கலாம். ஆனால், உங்களால் எங்கும் தப்ப முடியாது. காட்டிலும், மலையிலும் எங்கும் எங்கள் தளபதியின் ஆட்கள் இருக்கிறார்கள்,'' என்று எக்காளமிட்டபடி குதிரையின் விலாவில் உதைக்க அது காற்றை கிழித்து சென்றது.

'விஜயபுரியின் பொக்கிஷத்தை காட்டி மேலைநாட்டானுடன் கைகோர்த்து இந்த நாட்டை ஆளலாம் என்று நினைத்தால் இந்த அமைச்சர் அதற்கு குறுக்கே நிற்கிறாரே... விடக்கூடாது' என்று சிந்தித்துக்கொண்டே ராஜ முத்திரையுடன் அவசர அவசரமாக அரண் மனைக்கு வந்தடைந்தான் தளபதி. அவன் முகத்தில் ஒரு புன்னகை தாண்டவமாடியது. அந்த காயை வைத்து நாம் இந்த அமைச்சரின் அதிகாரத்தை இல்லை... அமைச்சரையே ஒழித்து விடுவோம் என்று இறுமாப்புடன் நினைத்தபடி மன்னரின் கொலு மண்டபம் வந்தான். அங்கே மன்னர் அமைச்சருடன் தீவிர ஆலோசனையில் இருப்பது தெரிந்தது. தளபதிக்கு அதைக் கண்டதும் பெரும் வயிற் றெரிச்சல் ஏற்பட்டது. மன்னர் தளபதியை கண்டு கொள்ளாதபடி அமைச்சருடன் பேசியது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

''மாமன்னருக்கு வணக்கம்!''

''ஓ தளபதியா? வாருங்கள் வாருங்கள்.... இப்போது என்ன செய்தி கொண்டு வந்திருக் கிறீர்கள்?''

''மன்னா இது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி. சொல்வதற்கே உடல் நடுங்குகிறது. இந்த நாட்டின் பெரும் பொறுப்பை வகிப் பவரும், இந்த நாட்டான் மாமன்னரின் நன் மதிப்பை பெற்றவரும் தேசப்பற்றாளர் என்று நாட்டு மக்களால் போற்றப்படுவருமான மரியாதைக்குரிய சாட்தாத் அருமைக்கும், பெருமைக்கும் உறிய இதே அமைச்சர் தான் மாமன்னர்!''

''என்ன சொல்கிறீர்கள் தளபதி!'' மன்னர் அதிர்ச்சி அடைந்தார்.

- தொடரும்...

பூரணி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us