PUBLISHED ON : மார் 18, 2011

தேவையான பொருட்கள்:
பழைய சிடி, பழைய வாழ்த்து அட்டை, பசை, வாட்ச் மிஷின் மற்றும் கடிகாரம் முள், மெல்லிய ரிப்பன், செல்லோடேப்.
செய்முறை:
1) வாழ்த்து அட்டையை சிடி அளவில் கட் செய்து சிடி மீது ஒட்டவும்.
2) வாட்ச் மெஷினை சிடியின் பின்பகுதியில் வைத்து செல்லோ டேப்பால் பொருத்தவும்.
3) கடிகார முள்ளை முன்பகுதியில் மிஷினுடன் சரியாக இணைத்து பொருத்தவும்.
4) சிடியின் மேல் பகுதியில் சிறுதுளையிட்டு மெல்லிய ரிப்பனில் கட்டி சுவரில் தொங்க விடவும்.
இப்ப நீங்க செய்த 'க்ளாக்' டிக் - டாக் என்ற சப்தத்துடன் ஓடும்.
தேவையான பொருட்கள்:
மாடலிங் க்ளே அல்லது களிமண், கத்தி, பென்சில், பல்குத்தும் குச்சி, நியூஸ் பேப்பர், பிளாஸ்டிக் அல்லது உலர்ந்த பூக்கள்.
செய்முறை:
மாடலிங் க்ளேயை அரை அங்குலம் கனத்திற்கு செவ்வக வடிவில் பலகைப் போல் செய்யவும். ஓரங்களை படத்தைப் பார்த்து வளைவாக கட் செய்துக் கொள்ளவும். மூன்றில் ஒரு பகுதியை படத்தைப் பார்த்து மேல் நோக்கி வளைத்து ஓரங்களை ஒட்டவும். வெளிப் பகுதியில் பல்குத்தும் குச்சிகளை உடைத்து வைத்து அழகுப்படுத்தவும். மேல் பகுதியில் இரண்டு துளையிட்டுக் கொள்ளவும். இப்போது பழைய நியூஸ் பேப்பரை பாக்கெட் போன்ற பகுதியில் வைக்கவும். ஏனென்றால், வடிவம் மாறாமல் இருக்கும். உலர்ந்ததும் பிளாஸ்டிக் அல்லது உலர்ந்த பூக்களை வைத்து அழகுப்படுத்தவும். துளையில் ஒரு ரிப்பனைக் கட்டி சுவரில் தொங்கவிடவும்.
