தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இருமுறை...

இருமுறை...

இருமுறை...


PUBLISHED ON : நவ 11, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு பணக்காரக் குடும்பம், தங்கள் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு உல்லாசப் பயணம் சென்றது. அங்குள்ள தண்ணீர்த் தேக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். அவர்களில் ஒருவன் நீர்த்தேக்கத்தில் நீந்தத் தெரியாத காரணத்தால், விழுந்து மூழ்கிக் கொண்டிருந்தான்.

அருகில் நின்ற சிறுவர்கள் கூச்சலிட, தோட்டக்காரனின் மகன் ஓடிவந்து, நீர்த்தேக்கத்தில் குதித்து சிறுவனை வெளியே கொண்டு வந்து காப்பாற்றிவிட்டான்.

செல்வந்தர், தோட்டக்காரனை அழைத்து, ''உன் மகன் என் மகனைக் காப்பாற்றியிருக்கிறான். நான் உனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?'' எனக் கேட்டார்.

தோட்டக்காரன் செல்வர்ந்தரிடம் தனது மகனைக் கல்லூரிக்கு அனுப்பத் தன்னிடம் பணம் இல்லையென்றும், அவனது கல்லூரிப் படிப்புக்கு உதவினால் நன்றியுடையவனாக இருப்பேன் எனவும் கூறினான். செல்வந்தரும் உதவுவதாக வாக்களித்தார்.

வருடங்கள் உருண்டோடின. வின்ஸ்டன் சர்ச்சில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில், பிரிட்டனின் பிரதமராக இருந்தார். போர் முடிவில் தெஹ்ரானில் முப்பெரும் தலைவர்களான சர்ச்சில், ஸ்டாலின், ரூஸ்வெல்ட் கூடி போர் முடிவுக்குப் பின்னருள்ள விஷயங்களைப் பேசி முடித்து தத்தம் நாட்டிற்குத் திரும்பினார்.

சர்ச்சில் நாடு திரும்பியவுடன், நிமோனியா காய்ச்சலில் அவதிப்பட்டார். பிரிட்டனின் தலைசிறந்த டாக்டரை, பிரிட்டனின் அரசர் சர்ச்சிலை பார்த்துக் கொள்ளும்படி அனுப்பினார். அவர்தான் பெனிசிலின் மருந்துகளை கண்டுபிடித்து அதைப் பெருகப் பண்ணிய டாக்டர் 'ப்ளெமிங்' அது மட்டுமல்ல, சர்ச்சிலை சிறுவயதில் தண்ணீர் தேக்கத்தில் அமிழ்வதிலிருந்து காப்பாற்றியவரும் ஆவார். ஆகவே, சர்ச்சிலை இருமுறை காப்பாற்றிய பெருமையை டாக்டர் ப்ளெமிங் பெறுகிறார்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us