தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வெஸுவியஸ் எரிமலை!

வெஸுவியஸ் எரிமலை!

வெஸுவியஸ் எரிமலை!


PUBLISHED ON : ஜன 17, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இத்தாலியர்கள் உணர்ச்சிப் பூர்வமாகவும் ஆவேசமாகவும் வெஸுவியஸ் எரிமலைப் பற்றி விவரிப்பதில் வியப்பில்லை. ஐரோப்பாவிலுள்ள அனைத்து நாடுகளிலும் இல்லாத ஓர் அதிசயம் இத்தாலியில் மட்டுமே இருப்பது இங்குள்ள குமுறும் எரிமலைகள் தான். அதுமட்டுமல்லாமல் இத்தாலியின் தென் பகுதிகளிலும், சிசிலி தீவிலும் அடிக்கடி பூமி அதிர்ச்சி ஏற்படுவதும் வேறு ஐரோப்பிய நாடுகளில் இல்லாத ஒன்று வால்கனோ (எரிமலை) என்ற வார்த்தை பிறந்ததே இத்தாலி நாட்டில்தான். தங்கள் நெருப்புக் கடவுளான வால்கனின் செயல்களே எரிமலை என்று நம்பினர். ஆகவே எரிமலைகளுக்கு, 'வால்கனோஸ்' என்று பெயரிட்டனர்.

மலைகளின் உள் குடைவுகளிலிருந்து, கற்களும், கல் குழம்புகளும் (லாவா) தீ ஜ்வாலையும் குமுறி வெளிப்படுவது இன்று சகஜமானாலும், எரிமலையின் நிழலில் வாழும் வாழ்க்கை நிம்மதியானதாக இருக்க முடியாது.

இங்குள்ள படத்தில் வெஸுவியஸ் புகை கக்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறீர்கள். 1944ல் வெஸுவியஸ் ஆக்ரோஷமாக கர்ஜித்து, நெருப்பை உமிழ்ந்து, பேரழிவை ஏற்படுத்தியது. இதேபோல, கி.பி,79ல் ரோமானியர்களின் செல்வங்கொழிக்கும் பாம்பே நகர் அழிந்ததும் வெஸுவியஸ் எரிமலையின் கோபத்தினால்தான். எரிமலையின் கோபத்தை வர்ணிக்க இயலாது. ஒரு பெரிய முழு நகரமே பூமியின் கீழே முப்பது அடிக்கு புதையுண்டு போகுமளவுக்கு, எரிமலை குழம்புகளும், சாம்பலும் வெளிப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us