
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பலவகை வாத்துக்களில் மர வாத்து தான் மிகப்பெரியது. இதன் இறக்கைகள் வெள்ளையாக இருக்கும். ஆண் வாத்து 2.7 கிலோ எடை இருக்கும். பெண் வாத்து 2.0 கிலோ வரை இருக்கும். இந்த வகை வாத்துக்களின் உடல் மின்னும் கறுப்பு அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும். தலை வெள்ளையாக இருக்கும். அதில் அடர்த்தியாக கறும் புள்ளி இருக்கும். சுற்றுப்புற சூழ்நிலையைப் பொறுத்து இதன் வர்ணம் மாறும். இதன் வலுவான கால்கள் மஞ்சள் நிறத்திலும், கண்கள் பளிச்சென ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும்.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வகை வாத்துக்கள் அசாம், பர்மாவில் மிகவும் பரவலாகக் காணப்பட்டன. இப்போது சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒன்று, இரண்டு காணப்படு கின்றன. சதுப்பு நிலக் காடுகளை அழிப்பதால் அழிந்து வரும் உயிரினங்களில் இதுதான் முதன்மையானதாக உள்ளது.