தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நாங்களும் அழகிகள் தான்!

நாங்களும் அழகிகள் தான்!

நாங்களும் அழகிகள் தான்!


PUBLISHED ON : அக் 28, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெப்ப மண்டல காட்டில், பிரமாண்டமான மரங்கள் வானளாவ உயரமாய் வளர்ந்து இருப்பதால், காட்டின் மேலே பெரிய குடையாய் விரிந்து காட்சியளிக்கிறது. இந்த பச்சை விதான மறைப்பின் கீழ் ஆயிரக்கணக்கில் அற்புத பறவைகள் வாழ் கின்றன. சூடான ஈரமான இந்த காடுகள் உலகின் பாதி மடங்கு 9000 பறவை வகைகளின் வசிப் பிடமாக உள்ளது. சத்தம் போட்டு கொண்டே இருக்கும் கிளிகள், பழம் மற்றும் விதைகளை சேகரித்து பூக்களில் இருந்து சாறை உறியும். பெரிய கழுகுகளோ, எதிர்பாராமல் திடீரென்று கீழ் இறங்கி குரங்குகளை தாக்கும். இந்த நீண்ட மூக்கு-பழம் தின்னும் பறவை தூங்கும்போது, தன் பெரிய வண்ணமயமான மூக்கை தன் பின்புறத்தில் வைத்து கொண்டு தூங்கும்.

டோகோ டோகான்!

இந்த டோகோ டோகேன் பறவை 35 செ.மீட்டர் உயரம் இருக்கும். இவை, தென் அமெரிக்காவை சேர்ந்தவை. இந்த பெரிய மூக்கு கண்ணுக்கு தெரிவதுபோல அவ்வளவு கனமானது அல்ல. இது காலியாக இருக்கும். இந்த அலகில் மெல்லிய எலும்பு இருக்கும். அது பலமும், ஆதரவும் அலகிற்கு தருகிறது. தன் அலகின் வெட்டு முனை மூலம் அதை ரம்பம் போல பயன்படுத்தி பெரிய பழங்களை வெட்டும்.

கலர்புல் மூக்கி!

டோகேன் பறவையின் அலகு நீண்ட தூரம் இருக்கும். பழம் மற்றும் விதைகளை எட்டி பறிக்கும். பழத்தை அல்லது விதையை எடுத்து மேலே போட்டு தன் தொண்டைக்கு அனுப்பும். தன் வலிமைமிக்க அலகால் கொட்டைகளை உடைத்து திறக்கும்.

கிளிகள்

கிளிகள் எல்லா வண்ணங்களிலும் வரும். ஆனால், பிரகாசமான பச்சை வண்ண கிளிகளை கூட வெப்ப மண்டல காட்டின் ஊடே பழங்கள் மற்றும் பூக்களிடையே கண்டுபிடிப்பது சிரமமானது. கிளிகள் தன் கூரிய கால் நகங்களில் உணவை பிடித்து கொள்ளும். சில கிளிகள் தன் வலது காலையும், சில இடது காலையும் உணவை பிடித்து கொள்ள பயன்படுத்தும்.

காட்டுக்கோழி!

நம் வீட்டில் வளர்க்கும் கோழிகள் இந்த வெப்ப மண்டல பறவைகளில் ஒன்றான காட்டு பறவை ஒன்றின் வம்சா வழிதான். பறவைகளில் ஒன்றான காட்டு பறவை ஒன்றின் வம்சா வழிதான். ஆனால், இந்த காட்டு பறவை பார்ப்பதற்கு நம் கோழி போல இருந்தாலும் கோழிகள் போல நிறைய முட்டைகள் போடாது.

ஹம்மிங் பேர்டு!

இவங்கதான் ஹம்மிங் பேர்டு. அழகாய் ரீங்காரம் செய்வாங்க. இதன் அலகின் நீளம் பூவின் அடிவரை செல்ல ஏதுவாகிறது.

ஹம்மிங் பறவைதான் பறவைகளில் பின் புறமாகவும் பறக்க கூடியவை. தொங்கி தின்னும் ஹம்மிங் தன் சிறகுகளை வெகு வேகமாய் அடித்தபடி, இந்த ஹம்மிங் குட்டி ஒரு பூவின் அருகே அந்தரத்தில் இருந்தபடியே பூவிலிருந்து சாறை அல்லது தேனை எடுக்கும்.

கலக்கலான சிறகுகள் சொர்க்கத்தின் பறவை எனப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us