PUBLISHED ON : மார் 24, 2017

அ நிறம் | அளவு
என் வயது 76; 15 ஆண்டுகளுக்கு மேலாக, சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகி.
வெள்ளிக்கிழமை காலையிலேயே சிறுவர்மலர் இதழை வாசித்தால் தான் எனக்கு அன்றைய நாள் இனிதாக செல்லும்.
'இளஸ்... மனஸ்...' பகுதி இந்த கால குழந்தைகளின் பிரச்னைகளை, என் போன்ற வயதானவர்கள் புரிந்து கொள்ள உதவுகிறது. ஸ்போக்கன் இங்கிலீஷ், பகுதியை படித்து, இரண்டாவது படிக்கும் என் பேரனுக்கு சொல்லி தருகிறேன்.
சிறுவர்கள் முதல் என்னை போன்ற வயதானவர் வரை அனைவரையும் கவர்ந்துள்ளதால், 'சிறுவர்மலர்' எங்களின், 'அறிவார்ந்த தோழன்' என்று கூறி கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
- வேதம்மாள் ஆத்மநாபன்,
புதுச்சேரி.
