PUBLISHED ON : ஏப் 14, 2017

சிறுவர்மலர் இதழை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். தலைமையாசிரியராக பணிபுரியும் நான், என்னுடைய நிர்வாக திறனுக்கும், பள்ளியை சிறப்பாக நடத்தி செல்வதற்கும், சிறுவர்மலர் உற்ற நண்பனாக விளங்குகிறது. இதில் வெளிவரும் கருத்துள்ள கதைகள், அறிவியல் செய்திகளை நேரம் கிடைக்கும் போது மாணவர்களுக்கு தெரிவித்து மகிழ்ச்சியடைகிறேன்.
அதனால், ஒவ்வொரு வியாழக்கிழமை இரவே, என் நினைவில் சிறுவர்மலர் இதழ் வந்துவிடும். வெள்ளிகிழமை காலை பொழுதில் ஒவ்வொரு வினாடியும் என் கண்கள் சிவக்க சிறுவர்மலர் இதழைத் தான் உற்று நோக்கும்.
ஸ்கூல் கேம்பஸ் பகுதியில் வரும் கடிதங்களின் மூலம் பல்வேறு தகவல்களை அறிந்து, என் பள்ளியில் அத்தகைய குறைகள் ஏற்படாமல் பாதுகாத்து வருகிறேன்.
இவ்விதழின் உதவியுடன் என் பள்ளி மாணவர்களுக்கு உச்சரிப்பு, தொடர்ச்சியாக வாசித்தல், பிழையின்றி வாசித்தல், எழுதிக்காட்டுதல் போன்ற பயிற்சிகளை அளிக்கிறேன்.
கிராமப்புற மாணவர்கள் என்பதால், ஆங்கிலத்தில் சற்று பலவீனமானவர்களாக இருப்பர். 'ஏல இங்கிலீஷ் பேசலாம் வாரீயால' பகுதியின் மூலம், அவர்களது ஆங்கில திறனை மேம்படுத்துகிறேன்.
எத்தனையோ மாணவ இதழ்கள் வெளிவருகிறது. அதில், சிறுவர்மலர் என்னை மிகவும் கவர்ந்த இதழாக திகழ்கிறது.
- லெ.சொக்கலிங்கம், தேவகோட்டை.
