PUBLISHED ON : மே 25, 2018

அ நிறம் | அளவு
ஓ... சிறுவர்மலர் இதழே...
வார வாரம் நீ ஆரவாரம்!
தமாஷ்களால், சிரிக்க வைத்து;
சிறுகதைகளால் சிந்திக்க வைத்து;
வண்ணப் படங்களால்,
கண்களை குளிர வைத்து;
அறிவியல் கட்டுரைகளால்,
அறிவை பட்டை தீட்ட வைத்து;
'இளஸ்... மனஸ்...' மூலம்
மனதை தெளிய வைத்து,
நிறை குடமாய் நிரம்பி நிற்கிறாய் நீ!
பக்கத்துக்குப் பக்கம், நவரசம்!
மனசுக்கு, அள்ளி அள்ளி தருகிறாய் பரவசம்!
இதனால், என் மனம் எப்போதும் உன் வசம்!
- சி.பழனிசாமி, தாம்பரம்.
