PUBLISHED ON : செப் 07, 2018

அ நிறம் | அளவு
அரசில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவன் நான். கடந்த, 17 ஆண்டுகளாக, 'தினமலர்' நாளிதழ் வாசித்து வருகிறேன். வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில், சிறுவர்மலர் இதழுக்காக, வீட்டில் எதிர்பார்ப்புடன் குடும்பத்தினர் காத்திருப்பர். என் பேரக்குழந்தைகள், 'ஸ்கூல் கேம்பஸ்' முதல், தொடர்கதை, சிறுகதை, படக்கதை என, எல்லா படைப்புகளையும் போட்டி போட்டு படிப்பர். அதன்பின், பெரியவர்கள் படிப்போம்.
படித்து முடித்ததும், நுாலகத்திற்கு சென்று வந்த திருப்தி ஏற்படும். இதை, ஒரு செய்திக்களஞ்சியமாக வைத்துள்ளோம். சின்ன சின்ன செய்திகளால், குழந்தைகளின் எண்ணங்களுக்கு, வண்ணம் சேர்க்கும் இதழ், வாரம் ஒருமுறை, அறிவுக்களஞ்சியமாகக் கிடைப்பது சிறுவர்மலர்!
- பொன்.ராமையா, தேனி.
