PUBLISHED ON : மே 24, 2019

அ நிறம் | அளவு
என் வயது, 86; நான், 35 ஆண்டுகள், அரசுப் பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்று, சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
கால் நுாற்றாண்டுக்கு மேலாக, சிறுவர்மலர் இதழின் தீவிர ரசிகன்; நல்ல பண்பை, ஒழுக்க நெறியை வலியுறுத்தும் சிறுகதைகளை, மிகவும் விரும்பி படித்து, சிறுபிள்ளை போல், குதுாகலம் அடைவேன்.
மொக்க ஜோக்ஸ்களை ரசித்து, சிரித்து மகிழ்வேன்; 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, அனுபவங்களை படிக்கும் போது, என் பள்ளி பருவ நாட்கள் நினைவுக்கு வந்து பரவசப்படுத்துகிறது.
மொத்தத்தில், சிறுவர்மலர், ஒவ்வொரு வாரமும், வந்து, என்னை, வசீகரிக்கும், பாரிஜாத மலர் என, மனதார வாழ்த்துகிறேன்!
- அருள்நாதன் தங்கராசு,
திருக்கோவிலுார்.
