PUBLISHED ON : ஆக 16, 2019

அ நிறம் | அளவு
என் வயது, 52; பள்ளியில் படித்த காலத்தில், வீட்டில் தினமும், தினமலர் நாளிதழ் வாங்க முடிந்ததில்லை. எனவே, பக்கத்து வீட்டில், சிறுவர்மலர் இதழை வாங்கி படிப்பேன்.
அதில் வரும் கதைகளை, சிறுவர், சிறுமியருடன் விளையாடும் போது கூறுவேன்; மிகவும் ஆர்வமுடன் கேட்டு மகிழ்வர். இதை கண்ட என் பெற்றோர், தவறாமல், தினமலர் நாளிதழ் வாங்க ஆரம்பித்தனர்.
பின், தடங்கல் இன்றி, சிறுவர்மலர் இதழை படிக்க முடிந்தது; இப்போதும் படித்து வருகிறேன்.
சிறுவர்மலர் இதழில் வரும் கதைகளை, என் பேரன், பேத்தியருக்கு படித்து காட்டுகிறேன்; அவர்களையும் படிக்க துாண்டுகிறேன். என் குடும்பத்தினர் அனைவரும், சிறுவர்மலர் இதழை ஆர்வமுடன் படிக்கின்றனர்.
- எம்.ஆர்.ராஜேஸ்வரி, சிவகங்கை.
