PUBLISHED ON : டிச 07, 2019

அ நிறம் | அளவு
என் வயது, 64; தினமலர் நாளிதழை, 30 ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். என் பள்ளி பருவத்தில், கண்ணன் என்ற சிறுவர் இதழை வாசித்திருக்கிறேன்.
அதன் பின், மிகச் சிறப்பாக காண்பது சிறுவர்மலர் இதழை மட்டும் தான். அறிவியல் மற்றும் உலக நடப்புகளை உள்ளடக்கியுள்ளது. சிறுவர்கள் வாசித்து பயனடையும் வகையில் எளிமையாக இருக்கிறது.
முதியவர்களாகிய நாங்களும் சிறுவர்மலர் படித்துவருகிறோம்; எங்கள் பிள்ளைகளும் படிக்கின்றனர். எங்கள் பேரப்பிள்ளைகளும் விரும்பி படிக்க ஆரம்பித்துள்ளனர். பேரன்கள் வாசிப்பில் கதை கேட்பது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இரண்டு தலைமுறைக்கும் மேலாக, சிறுவர், சிறுமியரை நல்வழிப்படுத்தி வரும் சிறுவர்மலர் இதழுக்கு பாராட்டுக்கள். மலர் மேன்மேலும் மணம் பரப்ப வாழ்த்துக்கள்.
- கே.ஆர்.சுந்தரம், மதுரை.
தொடர்புக்கு: 93452 38777
