தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : ஜூலை 11, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 11, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 89; அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன்.

வீட்டில், சிறுவர்மலர் இதழை முதல் ஆளாக படிப்பேன். என் பணிக்காலத்தில், இது போன்ற இதழ் வரவில்லையே என வருந்தாத நாள் இல்லை!

வீட்டிற்கு வரும் உறவினர்கள், என் பேரன்களுக்கு சிறு தொகையை அன்பளிப்பாக வழங்குவர். அந்த பணத்தை, சேமிக்க அறிவுரைத்தேன்; பயனில்லை. மனம் போன போக்கில் செலவு செய்தனர். அந்த செயலை மாற்ற வழியை தேடினேன்.

சிறுவர்மலர் இதழில் வரும், நீதிக்கதைகள், வரலாறு, அறிவியல் செய்திகளை அவர்களுக்கு பக்குவமாக கூறத் துவங்கினேன். சேமிப்பை வலியுறுத்தும் கதைகளை முதன்மை படுத்தி சொன்னேன்; வாசிக்கவும் வலியுறுத்தினேன்.

அதற்கு நல்ல பலன் கிடைத்தது; அஞ்சலகத்தில் சிறுசேமிப்பு கணக்கு துவங்கி, பணம் சேமிக்கும் பழக்கத்தை கைக்கொள்ள துவங்கிவிட்டனர். என் முயற்சி வீண் போகவில்லை என மகிழ்ச்சி அடைந்தேன். அறங்களை போதிக்கும், சிறுவர்மலர் இதழுக்கு வாழ்த்துக்கள்.

- ஜி.வி.நாராயணன், கோவை.

தொடர்புக்கு: 98422 01219


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us