
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 59; பி.காம்., பட்டதாரி; தினமலர் இதழை, 50 ஆண்டுகளாக படித்து வருகிறேன். ஏழை, எளியவர் வாழ்க்கை மலர உதவுகிறது. வீட்டில், சிறுவர்மலர் இதழ் இருந்தால், பள்ளி ஆசிரியர் ஒருவர் உடன் இருப்பதாக உணர்கிறேன்.
அட்டையில் மலரும் குழந்தைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம்.
குழந்தைகளின் ஓவியம், 'உங்கள் பக்கம்!' பகுதியில் அருமையோ அருமை. படிக்கும் ஆவலை துாண்டுகிறது படக்கதை.
எல்லா பத்திரிகைகளையும், பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போட்டு விடுவேன். ஆனால், சிறுவர்மலர் இதழை சேகரித்து, எங்கள் பகுதி பால்வாடிக்கு கொடுத்து வருகிறேன். அறிவுக் களஞ்சியமாக திகிழ்கிறது.
ஜி.விஜயகுமார், கோவை.
தொடர்புக்கு: 93447 36407

