PUBLISHED ON : பிப் 13, 2021

தினமலர் நாளிதழின் தீவிர வாசகன் நான்; நான்கு வயது ஆண் குழந்தை உள்ளது. குடும்பத்தில், அறிவுரை சொல்ல முதியவர் யாரும் இல்லை.
மகன் ஏதேனும் கேட்டு அடம் பிடித்தால், அவன் கவனத்தை திசை திருப்புவது மிக கடினம். எவ்வளவு விலை மதிப்புள்ள பொருளையும் வாங்கி கொடுத்தேயாக வேண்டும். இது பெரும் கவலையாக இருந்தது.
ஒரு நாள் அடம் பிடித்தபோது, சிறுவர்மலர் புத்தகத்தில் படங்களை காட்டி, கதைகளை கூற ஆரம்பித்தேன். அவன் கவனம் திரும்பி, ஆர்வமுடன் கேட்க துவங்கினான். நாளடைவில் இதுவே பழக்கமாகி விட்டது.
அடம் பிடிக்க ஆரம்பிக்கையில், சிறுவர்மலர் புத்தகத்தை கையில் எடுத்தால் போதும், எல்லாவற்றையும் மறந்து, கதை கேட்க வந்து விடுவான். வெகுநாள் கவலையைத் தீர்த்து வைத்த சிறுவர்மலர் இதழுக்கு மிக்க நன்றி.
குடும்பத்தில், பெரியவர்கள் இல்லாத குறையை ஈடு செய்கிறது.
- கே.குமார், கடலுார்.
தொடர்புக்கு: 98437 05009

